பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெடி குண்டுகள் 185

திவான் சாமியார் “அனுப்பின மாதிரிதான் இருக்கிறது. இருந்தாலும், இது இவ்வளவு பெரிய பட்டணமாயிருக்கிறதே! அவர்கள் இன்னார் என்பதை அதிகாரிகள் கண்டுபிடிக்க சாத்தியப்பட்டு இராது என்றே நினைக்கிறேன்” என்றார்.

உதவிச்சாமியார், ‘தங்கள் சிற்றன்னையைப் பற்றிய செய்தியைத் தெரிவிப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிப்பதாய்த் தாங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள் அல்லவா, அதை நாம் ஒரு வேளை இந்த மனிதருக்குக் கொடுக்க நேர்ந்தாலும் நேரலாம். ஒர் ஆயிரம் ரூபாயைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார்.

திவான் சாமியார் ஆயிரம் ரூபாய் நோட்டொன்றை எடுத்து உதவிச் சாமியாரிடத்திலேயே கொடுத்து சந்தர்ப்பத் திற்குத் தகுந்தபடி உபயோகிக்கும்படி கூறினார். பிறகு அவர்கள் இருவரும் புறப்பட்டு துரைக்கண்ணு முதலியார் இருந்த ஜாகைக்குப் போய்ச் சேர்ந்தனர். அது நிரம்பவும் சிறிய வீடாக இருந்தது. துரைக்கண்ணு முதலியார் துரும்புபோல மெலிந்து பாயில் படுத்திருந்தார். அவரது மனைவி அவருக்கு ஏதோ உபசரணை புரிந்து கொண்டிருந்தாள். இருவரது முகங்களும் மகா துக்க கரமாகவும், பரம வேதனைக்கு இருப்பிடமானவை யாகவும் காணப்பட்டன. அவர்களுக்கு வேறு இரண்டு சிறிய குழந்தைகள் இருந்தன. ஆனாலும், அதனால் இவர்கள் சிறிதும் ஆறுதலடையாமல் இரவு பகல் மனவேதனையில் ஆழ்ந்து விமோசனமின்றிக் கிடந்தனர். தாம் அருமையாய் வளர்த்த பெண் முகமுழிப்பில்லாமல் போய்விட்டதே என்ற துயரம் அவர்களை வதைத்ததைக் காட்டிலும், அவள் ஓடியதால், தங்களுடைய குடும்பத்திற்கு என்றைக்கும் மாறாத இழிவும், பழிப்பும் ஏற்பட்டு விட்டனவே என்ற வேதனையே, அவர்களு டைய உயிரைப் பருகிக் கொண்டிருந்தது. நமது சாமியார்கள் இருவரும் வெளியிலிருந்தபடி, முதலியாருடன் தாம் ஒரு முக்கிய மான விஷயத்தைக் குறித்து ஐந்து நிமிஷ நேரம் பேச வேண்டு மென்று செய்தி சொல்லி அனுப்பினர். அவர்களது வருகையைச் சிறிதும் எதிர்பார்த்தவரன்று ஆதலால் முதலியார் இரண்டு பரதேசிகள் தம்மிடம் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறார்களென்று ஐந்து நிமிஷ நேரம் சிந்தனை செய்து