பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 195

அவர்கள் அபாரமான செல்வமும், செல்வாக்கும் வாய்ந்தவர்கள். ஆதலால், அந்தப் பங்களா தத்ரூபம் தேவேந்திர சபைபோல எங்கும் நவமணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன்றி, ஜெகஜ்ஜோதியாக மின்னிய அலங்காரங்களுடன் நூற்றுக் கணக்கான சீமான்களும், சீமாட்டிகளும் வந்து நிறையப் பெற்றிருந்தது. பெரிய ஜங்ஷன்களில் ரயில் தொடர்கள் எப்போதும் வந்து போய்க் கொண்டிருப்பது போல மோட்டார் வண்டிகள் நூற்றுக் கணக்கில் வந்து கனவான்களையும் அவரது பத்தினிமார்களையும் குழந்தைகளையும் இறக்கிவிட்டுத் திரும்பிப் போனபடி இருந்தன. அந்தப் பங்களா ஒரு தனிப் பட்டணம் போலவே இருந்தது. ஒருவர் போலவே டாலி டவாலிகள் சட்டை, நிஜார், தலைப்பாகை முதலியவை தரித்திருந்த சேவகர்களும், போலீஸ் ஜெவான்களும், சுமார் ஆயிரம் பேர்கள் இருந்திருப்பர். எங்கு பார்த்தாலும் முத்துக் கொட்டகைகளும், பவழத் தோரணங்களும் பல வர்ணங்களில் இயற்றப்பட்ட மின்சார விளக்குகளும், ஒட்டு வேலைகளுமே மயமாக நிறைந்திருந்தன. பார்க்கும் இடமெல்லாம் வெல் வெட்டு ஸோபாக்களும், வழுவழுப்பான கருங்காலி சாய்மான நாற்காலிகளும், பூத்தொட்டிகளுமே காணப்பட்டன. பங்களா வின் தரை முழுதும் மகா மிருதுவாக இருந்த இரத்தின கம்பளங் களே மயமாகப் பரப்பப்பட்டிருந்தன. ஒரு பக்கத்தில் மாதுரிய மான சிற்றுண்டிகள் எப்போதும் வழங்கப்பட்டன. இன்னொரு புறத்தில் முதன் தரமான விருந்துச் சாப்பாடு நூற்றுக் கணக்கான ஜனங்களுக்கு நடந்துகொண்டே இருந்தது, தஞ்சை ஜில்லா விலிருந்து மகா பிரத்தியாதி பெற்றவர்களான நான்கு ஜதை தங்க நாகசுரக்காரர்களும், நான்கு ஜதை பாண்டு வாத்தியக்காரர் களும், வெகு லொகுசாக நடனம் செய்யத்தக்க தாசிமார்களும் வந்து ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு ஜதையாக இருந்து தத்தம் திறமையைக் காட்டி தெய்வ கீதம் முழங்க, கந்தருவ நாட்டியம் ஆட ஆரம்பித்து விட்டனர். வாய்ப்பாட்டு, புல்லாங்குழல், வீணை, ஜலதரங்கம், கொனக்கோல் முதலியவைகளில் தேர்ச்சியும் கியாதியும் பெற்ற ஏராளமான வித்வான்கள் வந்து நிச்சயதார்த் தத்தன்று முதலே தமது கச்சேரிகளை ஆரம்பித்துக் கொண்டனர். புஷ்பாவதியை மணக்க ஏற்பாடாயிருந்த மணமகன் அசிஸ்