பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 2C5

போலீஸ் கமிஷனர் : உம்முடைய தாயார் எங்கே? சுந்தரமூர்த்தி முதலியார் : என் தகப்பனாருக்கு உதவியாக இருக்கிறார்.

போலிஸ் கமிஷனர் : இப்போது, உம்முடைய தங்கையை யும் உம்மையும், உம்முடைய வேலைக்காரர்களையும் தவிர, இந்தக் கலியாணத்துக்கு வேறே உறவினர் யாரும் வர வில்லையா?

சுந்தரமூர்த்தி முதலியார் : யார் யாரோ வந்திருக்கிறார்கள். அவர்களுடைய பெயரையெல்லாம் இப்போது சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

போலிஸ் கமிஷனர் : நீங்கள் எல்லாருடைய பெயரையும் சொல்ல வேண்டாம். யாரையாவது ஒர் உறவினரைக் காட்டினால், அதுவே போதுமானது.

கந்தரமூர்த்தி முதலியார் : இதோ கலியாணப் பெண்ணுக்குப் பக்கத்தில் இருக்கிறாளே இந்தப் பெண் என்னுடைய இன்னொரு தங்கை.

போலீஸ் கமிஷனர் : பெண்ணினுடைய பெயர் என்ன? சுந்தரமூர்த்தி முதலியார் : ராஜாம்பாள். போலிஸ் கமிஷனர் : இந்தப் பெண்ணுக்கு இன்னம் கலியாணம் ஆகவில்லையே?

சுந்தரமூர்த்தி முதலியார் : இல்லை. போலீஸ் கமிஷனர் : உம்முடைய பெயர் என்ன? உம்முடைய பெரிய தங்கையின் பெயரென்ன?

சுந்தரமூர்த்தி முதலியார் : என் பெயர் சுந்தரமூர்த்தி முதலியார் பெரிய தங்கையின் பெயர் புஷ்பாவதி.

போலீஸ் கமிஷனர் : உம்முடைய தகப்பனாரின் பெயர் என்ன? அவர் இப்போது கோவிந்தபுரத்தில்தானே இருக்கிறார்?

சுந்தரமூர்த்தி முதலியார் : ஆம்! கோவிந்தபுரத்தில்தான் இருக்கிறார். அவருடைய பெயர் ஜெம்புலிங்க முதலியார் - என்றார்.