பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 செளந்தர கோகிலம்

அவ்வளவு தூரம் கேள்விகள் கேட்ட போலீஸ் கமிஷனர் அழகிய மணவாள முதலியாரை நோக்கி, “சரி: இப்போது இவர் சொன்ன தகவல்களை நீங்கள் கேட்டீர்களல்லவா? இதோ என்னோடு சில மனிதர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேளுங்கள்’ என்று கூறித் தமக்குப் பின்னால் நின்ற ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை அழைத்து எல்லோருக்கும் எதிரில் நிறுத்தி வைத்து, ‘ஐயா, நீர் யாரையா?” என்றார். அவர், “நான் புதுச்சேரிப் போலிசைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் என்றார்.

போலீஸ் கமிஷனர் : சரி; இதோ நிற்கிறதே ஒரு பெண். இந்தப் பெண் யார் என்பது உமக்குத் தெரியுமா?

புதுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் : ஒ தெரியும். எங்கள் ஊரில் நான் இருக்கும் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள துரைக்கண்ணு முதலியார் என்ற ஒரு பெரிய வர்த்தகருடைய பெண்.

போலீஸ் கமிஷனர் : இதோ கலியானக் கோலத்தில் இருக்கிறாரே இவரை உமக்குத் தெரியுமா?

புதுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் : தெரியும். இவர் சுமார் ஒன்றரை வருஷ காலத்துக்கு முன் எங்கள் வீட்டுக்கு எதிர்த்த வீட்டில் கொஞ்ச காலம் இருந்தார்.

போலீஸ் கமிஷனர் : இவரோடு இன்னம் யார் யார் இருந்தார்கள்.

புதுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் : இவருடைய தகப்பனார், தாயார், இந்தக் கலியாணப் பெண் ஆகிய மூவரும் இருந்தார்கள்.

போலீஸ் கமிஷனர் : இவர்கள் அந்த ஊரில் என்னென்ன பெயர்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள்?

புதுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் : கொஞ்ச நேரத்திற்கு முன் இவர் சொன்னாரே அதே பெயர்களைத்தான் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

போலிஸ் கமிஷனர் : இவருடைய தகப்பனார் இப்போது எங்கே இருக்கிறாரென்பது தெரியுமா?