பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம்

உயிரையே வைத்திருப்பவள் போலவும் நடித்து வருகிறேன். ஆனாலும், எவ்வளவு காலம் நான் இப்படி வேஷம் போட்டு, மனசுக்குப் பிடிக்காத இடத்தில் இருந்து உழல்கிறது. துஷ்ட வேலைக்காரர்களை ஏவி ஏவி இவர் என்னென்னவோ கெட்ட காரியங்களையும் திருட்டுகளையும் நடத்துவதாகத் தெரிகிறது. இவர் வெகு சீக்கிரம் ஜெயிலுக்குப் போய் விடுவார் என்பது நிச்சயம். நானும் இவருடன் இருப்பதனால், எனக்கும் அந்தக் கதியே வந்து வாய்க்குமோ வென்று பயப்படுகிறேன். ஆகையால், தாங்கள் இருவரும் என்மேல் இரங்கி, நான் செய்த தப்பிதத்தை மன்னித்து என்னை வீட்டுக்கு அழைத்துக் கொள்ள வேண்டு மாய்க் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன். என்னைப் பெற்ற அம்மாளும், அப்பாவும் என்னை இப்படிப் புறக்கணித்து விட்டால், எனக்கு வேறு புகலிடம் ஏது! பிழையை மன்னிக்க வேண்டுகிறேன். தாங்கள் பதில் எழுதினால், இம்மாதிரி நான் இவர் மேல் வருத்தமாய் எழுதியிருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டாம்.

இங்ஙனம், தங்கள் இருவரையும் நினைந்துருகும் மகள், துளஸியம்மாள்

-என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தை அழகிய மணவாளர் கணிரென்று உரத்த குரலில் படித்து முடித்தார். அவருக்கும், மற்ற ஜனங்களுக்கும் சுந்தரமூர்த்தி முதலியார்மீது உண்டான கோபா வேசத்திற்கும், அவர்கள் அடைந்த ஆச்சரியத்திற்கும் அளவில்லை. அந்தக் கடிதத்தின் விஷயத்தைக் கேட்ட செளந்தரவல்லி, “சே! இப்பேர்ப்பட்ட அயோக்கிய மனிதனா நீ!’ என்று வாய்விட்டுக் கூறியபடி மணையை விட்டுச் சரேலென்று எழுந்து ஸ்திரிகளின் கும்பலுக்குள் நுழைந்து கொண்டாள்.

ஜனங்கள் அப்போதே சுந்தரமூர்த்தி முதலியார் மீது விழுந்து அவரை நார் நாராய்க் கிழித்தெறிந்துவிட நினைப்பவர்போல சொக்காய்களை கையின்மேல் ஏற்றிவிட்டவராய்ப் பதறி அவரை நோக்கி நறநறவென்று பல்லைக் கடித்தனர். அழகிய மண வாளருக்குப் பக்கத்தில் நின்ற துணிகரமான ஒரு பெண்பிள்ளை புஷ்பாவதியைப் பார்த்து, “போடி எழுந்து அப்பாலே, தாலியறுத்த