பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 செளந்தர கோகிலம்

அப்படியா! இப்பேர்ப்பட்ட மோசக்காரனா இவன்!” என்று ஆரவாரம் செய்து, அளவற்ற ஆச்சரியமும் வீராவேசமும் கொண்டு, சுந்தரமூர்த்தி முதலியாரை அப்படியே நசுக்கிச் சாறு பிழிந்துவிட நினைப்பவர் போலத் துடிதுடித்து அவனைப் பார்த்துப் பலவாறு தூவிக்கத் தொடங்கினர். அந்த வரலாற்றைக் கேட்ட பூஞ்சோலையம்மாள் சகிக்கவொண்ணாத மனவேதனை யும், ஆத்திரமும், நடுக்கமும் கொண்டு, ‘'அடே படுபாவி! சதிகாரா! எவ்வளவோ மானமாகவும் கண்ணியமாகவும் இருந்த எங்கள் குடும்பத்தை ஒரு நிமிஷத்தில் சீர்குலைத்து அழிக்கப் பார்த்தாயேடா கொலைகாரா! உன் தலையில் இன்னம் இடிவிழவில்லையே!” என்று கூறி வீறிட்டு ஓவென்று கதறியழுது விட்டாள். அழகிய மணவாளர் ரெளத்திராகாரமான கோபம் கொண்டார்; கோவைப் பழம்போலச் சிவந்து தீப்பொறியைக் கக்கிய தமது விழிகளால் சுந்தரமூர்த்தி முதலியாரை ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வை மகா கூர்மையான வாளால் சுந்தரமூர்த்தி முதலியாரது இருதயத்தை இரண்டாய்ப் பிளப்பதுபோல இருந்தது.

அப்போது போலீஸ் கமிஷனர் அழகிய மணவாளரை நோக்கி, தாங்கள் இன்னொரு காகிதத்தையும் படியுங்கள். நேரமாகிறது’ என்றார். சகிக்கவொண்ணாத அபாரமான கோபாக்கினியினால், அழகிய மணவாளரது மூளை தெறித்து விடும் போல ஆகிவிட்டது. அந்த நிலைமையில் போலீஸ் கமிஷனர் கூறியது இன்னதென்பது அவரது மனத்தில் பட இரண்டொரு நிமிஷமாயிற்று. அவர் அந்த மூன்றாவது காகிதத்தையும் எடுத்துப் படிக்கத் தொடங்கினார். அது அடியில் வருமாறு இருந்தது:

பரம ரகளிலியம்

சென்னை போலீஸ் கமிஷனர் துரைக்கு நடுவீதி நமச்சிவாயன் அநேககோடி சலாம் செய்து எழுதும் மொட்டை விண்ணப்பம். -

சைனாபஜாரில் தபால் திருட்டு நடந்ததல்லவா, அதில் உண்மையான திருடனைவிட்டு விட்டு, உங்கள் போலீஸ்