பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 செளந்தர கோகிலம்

தெரிவிக்கப் போகிறேன். நீங்கள் இன்னம் பத்து நிமிஷ நேரம் பொறுத்து வந்திருந்தால், தாலி கட்டியாயிருக்கும். எங்கள் குடும்பத்திற்கு இது தீராத மனப்பிணியாகவும், விசனமாகவும் முடிந்திருக்கும் என் வாழ்நாள் முழுதும் என்னைப் பாதிக்கக்கூடிய பெருத்த அபாயத்திலிருந்து என்னை நீங்கள் காப்பாற்றினர்கள். கடவுள் உங்களுக்கு நீடித்த ஆயுளையும் பொங்குகிற செல்வத்தையும், நிரந்தரமான சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டுமாய்ப் பிரார்த்திப்பதுதான் நான் உங்களுக்குச் செய்யத் தகுந்த கைம்மாறு’ என்று கூறி நிறுத்தினார்.

அதற்குள் அழகிய மணவாளரின் தாயும் பூஞ்சோலையம் மாளும் தங்களுக்குள் ரகஸியமாக ஏதோ சில வார்த்தைகள் பேசிக் கொண்டனர். அழகிய மணவாளரும், அவரது தந்தையும் அந்த சம்பாஷணையில் கலந்து கொண்டனர். இரண்டே நிமிஷ காலம் கழிந்தது. உடனே அழகிய மணவாளர் போலீஸ் கமிஷனரை நோக்கி, “ஐயா! தாங்கள் எனக்கு இன்னோர் உதவி செய்ய வேண்டும். சிறைச்சாலையிலிருக்கும் கண்ணபிரான் முதலியாரின்மேல் இனியா தொரு தாவாவுமில்லையென்றும், அவரைக் கண்ணியமாக இனி விட்டுவிடலாமென்றும், தாங்கள் இவ்விடத்திலேயே எழுதி, இங்கே கலியாணத்திற்கு வந்திருக்கும் நீதிபதியிடம் கொடுத்தால், அவரைவிட்டு விடலாமென்று, அவர்கள் அதன்மேல் எழுதி விடுவார்கள். அந்த உத்தரவை வாங்கி எங்களிடம் கொடுங்கள்’ என்றார்.

போலீஸ் கமிஷனர், “ஓ! அதற்கு ஆக்ஷேபணை ஒன்று மில்லை. நிரபராதியை இனி ஒரு rணமும் சிறைச்சாலையில் வைத்திருப்பது அக்கிரமம்’ என்று கூறித் தமது சட்டைப் பையிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து பவுண்டன் பேனாவினால் எழுதி அதைக் கொண்டுபோய் சிறிது துரத்திற்கு அப்பாலிருந்த நீதிபதியிடம் கொடுக்க, அவர் கண்ணபிரான் உடனே விட்டு விட வேண்டியதென்று அதன்மீது எழுதிக் கொடுக்க, கமிஷனர் அதைக் கொணர்ந்து அழகிய மணவாளரிடம் கொடுத்தார்.

உடனே அவரது தந்தை எழுந்து நின்று எல்லா பந்து ஜனங்களையும் நோக்கி, “கனதனவான்களான பந்து மித்திரர்களே! நாமொன்று நினைக்க, தெய்வமொன்றைச் செய்விக்கிறது, சர்வ