பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 செளந்தர கோகிலம்

அதைக்கேட்ட அழகிய மணவாளரும் மற்றவர்களும் திடுக் கிட்டு அபாரமான ஆச்சரியமடைந்து, ‘ஆ அப்படியா! இவர்கள் மேலான பதவியில் இருந்தவர்களா அப்படியானால், சொல்ல லாம்” என்று கூறி மிகுந்த ஆவலோடு உதவிச் சாமியாரது வாயைத் பார்த்தபடி நிசப்தமாய் நின்றனர். அவர் கூறிய சொற்களைக் கேட்ட கண்ணபிரானும், கற்பகவல்லியம்மாளும் பெருத்த மன அதிர்ச்சியும் பேராவலும் அடைந்து பொங்கிக் கொந்தளித்தெழுந்த மனத்தினராய் உதவிச் சாமியாரை உற்றுப் பார்த்தனர். ஆனால், கற்பகவல்லியம்மாள் ஸ்திரீகளின் மறைவில் மான்போல மருண்டு மருண்டு ஒளிந்துநின்ற வண்ணம் இடைவெளிகளால் அவரைக் கூர்ந்து நோக்கினாள். இருவரும் பிரமித்து, பேச்சு மூச்சற்று, சித்திரப் பாவைகள்போல மாறிவிட்டனர்.

உடனே உதவிச் சாமியார், அழகிய மணவாளரைப் பார்த்து, ஆனால் இதில் இன்னொரு விசேஷம். இவர்கள் இருவருக்கும் முன்பு வேறு பெயர்கள் இருந்தன. அவைகளை இப்போது இவர்கள் மாற்றி வைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. அதனால்தான், எங்களுக்குக் கொஞ்சம் தயக்கம் உண்டாகிறது” என்று கூறியபின் கண்ணபிரானைப் பார்த்து, “என்னப்பனே குழந்தாய்! இதற்கு முன் உன் பெயர் ராஜாபகதூர் அல்லவா? உன் அன்னையாரின் பெயர் காந்திமதியம்மாளல்லவா? பயப்படாமல் சொல், கெடுதல் ஒன்றுமில்லை. உங்களுக்குப் பெருத்த சந்தோஷ சங்கதியையே நான் சொல்லப் போகிறேன்” என்றார்.

அவ்வாறு அவர் பேசிய தருணத்தில் குஞ்சிதபாத முதலியாரும், திவான் முதலியாரும் பெருத்த ஆவலும், குழப்பமும், மனப்பிராந்தியும் அடைந்து, காந்திமதியம்மாள் எங்கே நிற்கிறாளென்று உற்றுப் பார்க்கவும், அவள் தானா என்ற சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவும் முயன்றனர். அனால் அவர்கள் ஜனக் கும்பலுக்குள் மறைந்திருந்தமையால், கற்பக வல்லியம்மாள், கண்ணபிரான் முதலியோரது திருஷ்டிக்கு அவர்கள் படவில்லை. கடைசியாக உதவிச் சாமியார் கூறியதைக் கேட்ட கண்ணபிரான் அவரை உற்று உற்றுப் பார்த்ததன்றி சரேலென்று மணையைவிட்டு எழுந்து மிகுந்த பதைப்போடும் ஆவலோடும் பேசத் தொடங்கி, தாங்கள் யார் என்பது தெரிய