பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 281

வில்லையே! தாங்கள் என்ன சந்தோஷச் சங்கதியைச் சொல்லப் போகிறீர்கள்? என்னுடைய தகப்பனார் உயிரோடு இருக்கிறார் களா? அவர்கள் இங்கே வந்திருக்கிறார்களா?” என்று பதை பதைத்து வினவினான்.

உடனே உதவிச் சாமியார், “அப்படியானால், நான் உங்களுடைய பழைய பெயர்களைச் சொன்னது சரிதானா?” எனறாா.

கண்ணபிரான், “ஆம்” என்றார்.

உடனே உதவிச் சாமியார் “அப்படியானால், இதோ உன் தகப்பனார் வந்திருக்கிறார்கள். அம்மாளையும் அழைத்துக் கொண்டு இப்படி வா’ என்றார். அவ்வாறு அவர் சொல்லி வாய் மூடியது தான் தாமதம். அது வரையில் மறைவில் நின்று கொண்டிருந்த கற்பகவல்லியம்மாள் அபாரமான மின்சார சக்தியினால் ஊக்கப்பட்டவள்போலக் கட்டிலடங்கா ஆவேசங்கொண்டு, ‘ஆ அப்படியா என் பிரானபதி இங்கே வந்திருக்கிறார்களா! எங்கே! எங்கே?’ என்று வாய்விட்டு கதறித் தன்னையும் உலகையும் மறந்தவளாய், உதவிச் சாமியார் இருந்த இடத்தை நோக்கி ஓடி வந்தாள். அது போலவே கண்ணபிரானும், தாயைவிடப் பன்மடங்கு அதிகரித்த பதைப்பும் பேராவலும் அடைந்து சந்நதங் கொண்டவனாய், “அப்பா! அப்பா என் அப்பா எங்கே இருக்கிறார்கள்?’ என்று கன்றைத் தேடும் தாய்ப்பசு போல அலறிக்கொண்டு, ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஓடிவந்தான். கற்பகவல்லியம்மாளின் முழு வடிவத்தையும் இப்போதே நன்றாகப் பார்த்த திவான் முதலியாரும் அபாரமான மனவெழுச்சியும், கொதிப்பும், மனவேகமும் அடைந்து தம்மையும் உலகையும் மறந்து, ‘ஆ’ என் காந்திமதி என் தங்கமே! அப்பா ராஜாபகதூர் என் செல்வக் குழந்தாய்!” என்று பிரமாதமாகக் கதறியவராய் எழுந்து எதிர்கொண்டோடினார். அதுவரையில் ராஜாபகதூரையும், காந்திமதியம்மாளையும் மாத்திரம் பார்த்துச் சகிக்க வொண்ணாத மன அதிர்ச்சியும் எழுச்சியும் பேராநந்தமும் அடைந்து தவித்திருந்த குஞ்சிதபாத முதலியார், அதுவரையில் தம்மோடு இருந்து, தமக்கு உதவிகள் செய்து வந்த பரதேசியே தமது