பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27Ο செளந்தர கோகிலம்

உடனே மகாராஜா இதை கவர்னருக்குச் சொல்ல இருவரும் உடனே புறப்பட்டு உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்கள்: என்றான்.

அதைக்கேட்ட அழகிய மணவாளர் முதலியோர் அந்த திவானினது மேம்பாடு எவ்வளவு என்பதை அதிலிருந்து யூகித்துக் கொண்டு அவரது பாந்தவ்வியம் தங்களுக்கு ஏற்பட்டதைப் பற்றிப் பூரித்துப் போயினர். உடனே திவான் முதலியார், அழகிய மணவாளர், இன்னம் பல கனவான்கள் எல்லோரும் வெளியில் செல்ல, அங்கிருந்த மகாராஜா வண்டியை விட்டு ஓடோடியும் வந்து அடக்கவொண்ணாத மனவெழுச்சியோடும் ஆநந்தத்தோடும் நமது திவான் முதலியாரைக் கட்டித் தழுவி, ‘ஐயா கனவானே! தங்கள் குடும்பத்துக்கு நேர்ந்த துன்பங்களை எல்லாம் கொஞ்ச நேரத்திற்கு முன் யாரோ ஒருவர் டெலிபோன் மூலமாய் எனக்குத் தெரிவித்தார். அவர் உங்களுக்கு உதவியாயிருந்த சாமியாராம். அவர் சொன்னதைக் கேட்டவுடன் நான் புறப் பட்டு ஓடிவந்தேன். நீங்கள் இறந்து போனதாய்க் கேள்வியுற்றது முதல் நானும் என் தேசத்துக் குடிகளும் அடைந்த விசனம் இன்னும் மாறவில்லை. நீங்கள் போன பிறகு மூன்று திவான்கள் வந்துவிட்டார்கள். எவரும் என் மனசுக்குப் பிடித்தமானவராக இல்லை. ஆகையால் எவரும் நிலைக்கவில்லை. இப்போது என் சமஸ்தானத்தில் திவானே இல்லை. அது விஷயமாய் கவர்னரிடம் நேரில் பேசிவிட்டுப் போகலாமென்றுதான், நான் சென்னைக்கு வந்தது. வந்த இடத்தில் தெய்வச் செயலாக, இந்த சந்தோஷ சங்கதி கிடைத்தது. நீங்கள் இந்த நிமிஷம் முதல் உங்கள் உத்தியோகத்தை வகித்து எங்கள் சமஸ்தானத்துக் குடிகள் rேமப்படும் படியான புண்ணியத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். இந்த வேண்டுகோளை நீங்கள் மறுக்கவே கூடாது” என்று அன்பாக வற்புறுத்திக் கூறினார். -

அதைக்கேட்ட திவான் முதலியார் சிறிது சிந்தனை செய்து, ‘தங்கள் உத்தரவுப்படி நடக்க வேறு ஆக்ஷேபணை ஒன்று மில்லை. என் தகப்பனார் விருத்தாப்பிய தசையிலிருக்கிறார்கள். அவர்கள் எங்கள் பூர்வீக ஊராகிய திருவடமருதூரை விட்டு வேறிடத்திற்கு வரமாட்டார்கள். அவர்களை அவர்களது தள்ளாத காலத்தில் அநாதரவாக விட்டு நான் தூரதேசத்தில்