பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 271

இருப்பது உசிதமல்லவென்று நினைக்கிறேன். அந்த ஓர் இடைஞ்சலைப் பற்றித்தான் யோசிக்கிறேன். வேறொன்றும் இல்லை” என்றார்.

திருவனந்தபுரம் மகாராஜா, “அக்கறையில்லை. நீங்கள் இன்னொரு காரியம் செய்யுங்கள். ஒருமாத காலம் திருவனந்த புரத்திலும் ஒருமாத காலம் திருவடமருதூரிலுமாய் நீங்கள் இருந்து, உங்கள் உத்தியோகத்தைப் பார்க்கலாம். அதனால் உங்களுக்கு ஆகும் பிரயாணச் செலவுகளையெல்லாம் நம்முடைய சமஸ்தானத்திலிருந்தே கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

அதற்கு மேல் திவான் எவ்வித ஆட்சேபணையும் சொல்ல இயலவில்லை. உடனே அவ்விடத்திலேயே மகாராஜா அவருக்கு உத்தரவு எழுதிக்கொடுத்துவிட்டார். நிரம்பவும் பணிவாக அதை வாங்கிக்கொண்ட திவான் முதலியார் மகாராஜாவுக்கும், கவர்னருக்கும் சலாம் செய்து தமது நன்றியறிதலைச் செலுத்தியது அன்றி அவர்களை உள்ளே அழைத்துப்போய் உட்காரச்செய்து புஷ்பமாலைகளை வரவழைத்து அவருக்குச் சாத்தி தாம்பூலம் முதலியவை வழங்கி தமது குமாரனான ராஜாபகதூரை அவர்களுக்கு முன்னால் நிறுத்தி அவன்தான் தமது புத்திரன் என்பதையும் விக்ஞாபகம் செய்து கொண்டார். கலியான வெகுமதியாக அவனுக்கு திருவனந்தபுரம் மகாராஜா லக்ஷம் ரூபாய்க்கு ஒரு செக்கு எழுதிக்கொடுத்த பின் அவ்விடத்தை விட்டு கவர்னர் துரையுடன் புறப்பட்டுப் போய்ச் சேர்ந்தார்.

மூன்றாவது நாள் காலை பத்து மணி சுமாருக்கு மேள தாளங்களுடன் வேறு இரண்டு வரிசைகள் வந்து சேர்ந்தன. விலை உயர்ந்த சேலைகள், ரவிக்கைகள், ஆயிரம் பவுன்கள், கற்கண்டு, கனிவர்க்கங்கள், புஷ்பம் முதலிய சாமான்களை எடுத்துக்கொண்டு பல ஆட்கள் வர, நமது திருச்செந்தூர் வீரம்மாளும் அவளது புருஷனான கண்ணுசாமி வாண்டையாரும் வெகு ஆடம்பரமாக வந்து சேர்ந்தனர். இன்னொரு புறத்தில் அதே மாதிரியான வரிசை மேளதாளங்களுடன் நமது கண்டியூர் மேலப்பண்ணைக் கந்தசாமி முதலியாரும் அவரது மனையாட்டி யும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் நால்வரும் வரிசைகளை