பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28O செளந்தர கோகிலம்

ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அந்தப் பெண்ணை வேறு யாரும் கலியாணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆகையால், நமது பரோபகாரியான முத்துசாமி அதனால் தனக்கு இழிவு வந்தாலும் வரட்டுமென்று நினைத்து, அந்தப் பெண்ணை அழைத்து வந்து பகிரங்கமாகக் கலியாணம் நடத்தி அவளை உத்தமகுண பத்தினியாக மாற்றி அவளோடு இல்லறம் நடத்தி வருகிறான்.

மேலப்பண்ணை கந்தசாமி முதலியார் கோடீஸ்வரர் ஆகிவிட்டபோதிலும், தாம் ஆரம்பத்தில் திவானிடம் சுயம்பாகியாயிருந்தவர் என்பதை மறவாமலேயே இருந்து வருகிறார். *

வீரம்மாளும், அவளது புருஷரான வாண்டையாரும் செந்திலாண்டவன் பாதத்தடியில் இருந்த வண்ணம் அமோக மாய் வாழ்ந்து சர்வ ஜனங்களும், மனங்குளிர்ந்து, சந்தோஷமாய் இருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் தான தருமங்களை ஏராளமாகச் செய்து முதலியார் சத்திரங்களை இப்போதும் நடத்தி வருகிறார்கள்!

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

சுபம்! சுபம்!! சுபம்!!!