பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 செளந்தர கோகிலம்

இவரையாவது இவருடைய சம்சாரத்தையாவது அவமரியாதைப் படுத்த வேண்டுமென்று இப்போதும் எண்ணவில்லை; இனியும் கனவில்கூட அதை நினைக்கக் கூடியவனல்ல” என்றார்.

அதைக்கேட்ட நீதிபதியும், பிராசிகூடிங் இன்ஸ்பெக்டரும் அப்படியே பிரமித்துப் போயினர். தாம் டைத்தியக்காரரென்று மதித்த அந்தப் பரதேசி நிரம்பவும் சாமர்த்தியமாகவே பேசி எல்லோரையும் வென்றுவிட்டார் என்று உணர்ந்தனர். அந்தப் பரதேசி கந்தசாமி முதலியாருடைய குடும்ப வரலாற்றை நன்றாகத் தெரிந்து கொண்டு, வேண்டுமென்றே எல்லா ஜனங்களுக்கும் முன்னால் பகிரங்கமாய் அவரை அவமானப் படுத்தி விட்டார் என்ற எண்ணமும் ஆத்திரமும் அவர்களது மனத்தில் எழுந்தன. ஆனாலும் பரதேசி கூறியதில் குற்றம் கண்டுபிடிக்க வழி இல்லாமையால், தாம் என்ன செய்வது என்பதை அறியாமல் சிறிது நேரம் எதையோ சிந்திப்பவர் போலக் கீழே குனிந்திருந்தபடி மெளனம் சாதித்தனர். அங்கு டந்த விபரீத சம்பாஷணையைக் கேட்டு ஜனங்கள் வியப்பும், பிரமிப்பும், கொதிப்பும் அடைந்து, மேலே என்ன நடக்கிறதென்பதை அறிய ஆவல் கொண்டு துடிதுடித்து நின்றனர்.

மேலப்பண்ணை முதலியாரது மனநிலைமையோ விவரிக்க வொண்ணாததாய் இருந்தது. தமது பூர்வீக வரலாற்றையெல்லாம் அந்தப் பரதேசி எப்படித் தெரிந்து கொண்டிருப்பாரென்ற சந்தேகமே பெரிதாக எழுந்து அவரை உலப்பத் தொடங்கியது. சாமியாரது முகத்தை முதலியார் உற்று உற்றுப் பார்க்கிறார். தமது பூர்வீக வரலாற்றைத் தாம் தமது மனைவிக்கு மாத்திரம் ரகசியமாய்த் தெரிவித்து வைத்திருந்தார். ஆதலால், அவள் மூலமாய் அது வெளிப்பட்டிருந்தாலன்றி வேறு யாருக்கும் தெரிய வகையில்லையென்று மேலப்பண்ணை முதலியார் நன்றாக உணர்ந்தவராய் சாமியாரை நோக்கி, ‘ஐயா! நீங்கள் யாரென்பது தெரியவில்லையே! நான் நிரம்பவும் ரகசியமாக வைத்திருக்கும் என் குடும்ப வரலாறு உங்களுக்கு எப்படித் தெரிந்தது? எந்தப் புண்ணியமூர்த்தியின் கைராசியினாலும், ஆசீர்வாதத்தினாலும், அவர் எனக்குக் கொடுத்த செல்வம்