பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 37

யும், சொந்த மனிதர்களையும் அறவே தமது மனத்தைவிட்டு விலக்கி, அந்த மனோரம்மியமான ஸ்தலத்தின் அற்புதக் கவர்ச்சியில் ஈடுபட்டவராய், அவ்விடத்திலுள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவதும், சுவாமிக்குப் பூஜை அர்ச்சனை நிவேதனம் முதலியவைகளை நடத்துவதற்கான காரியங்களைச் செய்வதுமாய் இருந்தார். உதவிச் சாமியாரும் அவரது நோக்கப்படியே நடந்து கொண்டதன்றி அங்கு காணப்பட்ட மனிதர்களிடத்தில் அவ்வூரில் அரிசி மில் வைத்திருக்கும் இராமலிங்க முதலியாரின் வீடு எங்கே இருக்கிறதென்று விசாரித்தார். அதைக் கேட்ட அவ்வூர் வாசிகள் அவர்களைப் பார்த்துப் புரளியாக நகைத்து, ‘இந்தப் பரதேசிகளுக்குப் பைத்தியம் போலிருக்கிறது’ என்று கூறிய வண்ணம் அவர்களுக்கு மறுமொழி கொடாமல் போயினர். வேறு சிலர் அவர்களை நோக்கி, “அரிசியாவது மில்லாவது? அப்படியென் றால் என்ன அர்த்தம்?” என்றனர். மற்றும் சிலர், “இந்த ஊரில் புளியங்கட்டையாலான உரலும் செம்மரத்தாலான உலக்கையும் தான் அரசி மில். இவ்வளவு சிறிய ஊருக்கு அரிசி மில்தான் ஒரு குறையா இனியாராவது அரிசி மில் வைத்தால்தான் உண்டு. இப்போது யாரும் அரிசி மில் வைக்கவில்லை. இராமலிங்கத்தின் அரிசிமில் இதோ பக்கத்திலிருக்கும் இராமேசுவரத்திலுள்ள கோவில் மடப்பள்ளியில்தான் இருக்கிறது” என்று மறுமொழி கூறினர். அவர்கள் கூறிய சொற்களை நமது திவான் சாமியாரும் கேட்டுக்கொண்டே இருந்தனர். ஆதலால், மதுரையில் நெல் மண்டிக்காரர் உதவிச் சாமியாரிடம் சொன்ன தகவல் பெருத்த அண்டப் புளுகு என்பதை திவான் கண்டுகொள்ளவே, அவரது ஆச்சரியம் அளவிட இயலாததாக மாறியது. அவர் உதவிச்சாமியாரை நோக்கி, “ஐயா! என்ன விநோதம் இது! மதுரை ஆற்றங்கரையில் உங்களைச் சந்தித்துத் தகவல் சொன்னவர் வேறே எந்த ஊரின் பெயரையாவது சொல்லி இருப்பாரா? அந்தச் சப்தம் உங்கள் காதில் சரியாய்ப் படாமலிருக்குமா? ஒரு வேளை அது திருச்செந்துறையாக இருக்குமா?’ என்றார். உதவிச் சாமியாரும் வியப்பும் பிரமிப்பும் அடைந்தவராய்க் காணப்பட்டு, ‘இது எனக்கும் அதிசய மாய்த்தான் தோன்றுகிறது. திருச்செந்தூர் என்று அவர் நன்றாகச்