பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது $31.

கரங்குவித்து, ‘முருகா! முருகா! செந்திலாண்டவனே! எம்பெருமானே தீராத என் கலியைத் தீர்த்தருளப்பனே’ என்று பிரார்த்தித்து அடியில் வரும் பாடலை மிகமிகக் கனிவாகப் பாடத்தொடங்கி,

‘அரசரெலாம் மதித்திடப் பேராசையினாலே அரசோ

டாலெனவே மிகக்கிளைத்தேன், அருளறியாக் கடையேன் புரசமரம் போற்பருத்தேன்; எட்டியெனத் தழைத்தேன்; புங்கெனவும் புளியெனவும் மங்கி யுதிக்கின்றேன்; பரசும் வகைதெரிந்து கொளேன்; தெரிந்தாரைப் பணியேன், பசை அரியாக் கருங்கல் மனப்பாறை சுமந்துழல்வேன்; விரசநிலத்து என் பிறந்தேன்? கருத்தையறியேன்; வியக்குமணிக் குன்றில் ஓங்கி விளங்கும் பரம்பொருளே’ என்று பாடிப் பரவசமடைந்து மயங்கி ஒய்ந்து பக்கத்திலிருந்த சுவரில் சாய்ந்தார். அப்பொழுது முருகக் கடவுளுக்கு அருகிலிருந்த குத்துவிளக்கின் திரியிலிருந்து கலகலவென்று பொறிகள் உதிர்ந்தது. சுப்பிரமணியக் கடவுளே அவரது ஆழ்ந்த பக்தியைக் கண்டு வியந்து தமது அருளொளிச்சுடரைப் புஷ்பமாரிபோல உதிர்த்துவிட்டு, அவருக்கு அபயஸ்தம் கொடுப்பதுபோல இருந்தது. அதே சமயத்தில், ஐயோ பாவம் அதிக உயரத்திலிருந்து விழுந்து விட்டானடா அதனால் காயம் பலமாய் பட்டுவிட்டது போலிருக்கிறது. இரண்டொரு படிகளிலிருந்து வழுக்கி விழுந் திருந்தால், இவ்வளவு கஷ்டம் இராது. இருந்தாலும் பரவா யில்லை. கொஞ்சம் முன்னைப்பின்னை எல்லாம் சரிபட்டுப் போகும்” என்று யாரோ சிலர் தமக்குள் ஓங்கிப் பேசிக்கொண்ட அசரீரி வாக்கு உண்டாயிற்று. அந்த வார்த்தைகள் மாத்திரம் திவானினது செவிகளில் நிரம்பவும் தெளிவாகப்பட்டன வேயன்றி, அவர்கள் பேசிய மற்ற விஷயங்கள் கேட்கவில்லை. தெய்வம், தனக்கு அவ்விதமாக வாக்குக் கொடுப்பதாய் திவான் சாமியாரது மனத்தில் ஒர் எண்ணமும் உதித்தது. அதை ஆமோதிப்பது போல அந்தச் சமயத்தில், குருக்கள் அவரிடம் வந்து கற்பூர ஹாரத்தியைக் காட்டினார். திவான் சாமியார் தமது இருகரங்களாலும், அதைத் தொட்டுத் தமது கண்களில் ஒற்றிக் கொண்டு, விபூதி, தேங்காய், பழம், பத்திரம், புஷ்பம் முதலிய