பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 & லா. ச. ராமாமிருதம் எனக்கு வளி மறந்து போச்சு. சுத்துமுத்தும் பாத்தா ஒருத்தரு மில்லே. எனக்கு ஒரே அளுகையா வந்திட்டுது. நான் ரோட்டோரமா நின்னிட்டு அளுதுகிட்டு இருந்தேன். "அப்போ ஒரு ஆள் அந்தப் பக்கமா வந்தான். என்னைத் தாண்டிப் போனான். அப்புறம் திரும்பிப் பார்த்தான். நின்னான். மேலே இன்னும் கொஞ்சம் நடந்து போனான். மறுபடியும் என்னை முளிச்சுப் பார்த்தான். அவன் பார்வை ஒரு மாதிரியாயிருந்திச்சு. என் முகத்தைப் பாக்கல்லே. களுத்துக்குக் கீளே, இடுப்பு வரைக்கும்தான் கண்ணோட்டம் நின்னுது. அப்புறம் எண்ணத்தை என்னவோ திடம் பண்ணிக்கிட்டுத் திரும்பி நேரே வந்தான். "ஏன் அழுவரே? எந்த ஊர்? "ஐயா, ஊருக்குப் புதிசு- நாட்டுப்புறம். வளி தப்பிப் போச்சு இன்னேன் விக்கிக்கிட்டே "ஏன் வந்தே இந்த ஊருக்கு? "புளைக்க வந்தேனுங்க. எங்கேயாச்சும் பத்துப் பாத்திரம் துலக்கிப்போட்டு வாசக்கூட்டி வேலையவப்பட்டா போதுங்க” "அந்த ஆள் என் களுத்தைப் பார்த்துக்கிட்டே கலியாணம் ஆயிட்டுதான்னு கேட்டான். “கையிலே ஒரு குளந்தையிருக்குதுங்க- என் எசமானர் கிட்டே விட்டுட்டு வந்திருக்கேனுங்க” “எத்தனை வயசு?” “இரண்டு மாசங்க-” “சரி வா. உன்னதிர்ஷ்டம் இந்தப்பக்கமா நான் வந்தேன். உனக்கு வேலை வாங்கித் தரேன். என்னோடு வா" இன்னுட்டு நடந்தான். எனக்குக் கொஞ்சம் பயமாய்த்தானிருந்திச்சு. இருந்தாலும் ஆள் நடமாட்டமிருக்கிற இடமா வந்து