பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரவான் 17 “எனக்கு இன்னிக்கு மனம் தாளலே. சண்டை போட்டுக் கிட்டு வந்துட்டேன்.” அவளும் சண்டை போட்டுக்கொண்டு வந்துவிட்டாள். அவனும் சண்டையிலே போய்ச் சேர்ந்துவிட்டான். ஆனால் பிரயோசனம் என்ன? ஒன்றுமில்லை. குழந்தையைப் பார்த்த வுடனேயே அவனுக்குத் தெரிந்துபோய் விட்டது. அதற்கு மூச்சு சத்தம் போட ஆரம்பித்துவிட்டது, கொர் கொர் என்று. அவள் வயிற்றிலேயும் வாயிலேயும் அடித்துக்கொண்டு அழுகிறாள். ஆயினும் அவன் மனம் பளிங்கெனத் தெளிந்து சிந்திக்க ஆரம்பித்துவிட்டது. - ‘எல்லாம் பாரதயுத்தம் மாதிரிதான். ஊரிலே தருமராஜா கோவுல்லே காப்புக்கட்டி பாரதம் உபன்யாசம் வெச்சாங்களேஎல்லாரும் தோத்தாங்க. எல்லாரும் ஜெயிச்சாங்க. தோத்தவனும் கஷ்டப்பட்டான், ஜெயிச்சவனும் சொகப் படல்லே. என்னவோ காரியம் சாதிக்கிறாப்போல, சண்டை போட்டதிலே கொறைச்சலில்லே, நாள் பாத்ததிலே கொறைச்ச வில்லே- பலி போட்டதிலே கொறைச்சலில்லே- அரவான் பலி!” 'கொர். கொர்.ர்.” "மொதல்லே புளைக்கிற வளியைக் கண்டுட்ட மாதிரி குளந்தையைப் பலி வெச்சோம். அப்புறம் அதுக்குமேலே, ஒசத்திக் காரியம் பண்றாப்போல சண்டையிலே போய் சேர்ந்தாச்சு. இனிமேல் தப்ப முடியாது. கைநாட்டுக் கொடுத்தாச்சு. நாளை மத்தியான வண்டிக்குப் புறப்படணும். அப்புறம் அந்த வண்டியிலே எங்கே போய் தள்ளறானோ. போவாமே இருந்தோம்னா நாளைக்கு கைக்கு விலங்கோட வந்துடுவான். பூட்டுமேல் பூட்டு புளைக்கற வளி என்ன? சாவுற வளிதான்.”