பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்வா & 129 நெருக்கத்தில், இம்மங்கிய வெளிச்சத்தில், அவள் முகத்தின் கவர்ச்சி பன்மடங்கு அதிகமாய் எனக்குப் பட்டது. “மணம் புரிந்துகொண்டபின் மனிதன் நிலை என்ன வாகிறது? என்று இன்னும் என்னைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். எப்படியிருந்தாலும், அதற்கு முன்னால் இருந்தாற் போல் அவன் இருப்பதில்லை. கால்கட்டு, பொறுப்பு என்பதைப் பற்றி நான் இப்பொழுது பேசவில்லை; அவன் மனநிலை. எப்படியோ அவன் முழுமை அவனிடமிருந்து கழன்றுவிடுகிறது. அவன் இரு கூறாய்விடுகிறான். ஒரு பாதியை மனைவி பெற்று விடுகிறாள். அவனிடமிருந்து போனது, போனதுதான். அதை அவன் திரும்பிப் பெறும் முயற்சியில் தவிக்கும் தவிப்புத்தான் தாம்பத்திய வாழ்க்கையோ? ஆயினும் அதே மாதிரி தன் பாதியை மனைவி அவனிடம் கொடுக்கிறாளோ? அவனிடமிருந்து அடைந்த பாதியே அவளுடைய கோட்டை ஆண்களைவிட ஏமாந்த பிராணி இவ்வுலகில் எதுவுமே இல்லை! அவள் அமைதி முதல் கொஞ்ச நாட்களுக்கு அதன் புதுமையால் ஒரு கவர்ச்சியாயிருந்தது. வெய்யிற் காயும் பூனைக் குட்டிபோல் அவள் சோபாவில் சுருண்டு படுத்துக்கொண்டு புன்னகை புரிந்துகொண்டிருப்பாள். மடியில் ஒரு புத்தகம் கவிழ்த்துப் போட்டிருக்கும். அவள் அதைப் படித்துக் கொண் டிருந்தாளோ? அல்லது பகற் கனவு கண்டு கொண்டிருந் தாளோ? என்னதான் கனவு கண்டு கொண்டிருப்பாளோ? அவளுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? மொத்தத்தில் அவள் வீட்டைப்பற்றிப் பேசுவதில் அவளுக்கு விருப்பமில்லை என்று அறிந்தேன். இளமையிலேயே வறுமை பிடுங்கித் தின்னும் வாழ்க்கையைப் பற்றிப் பிரியமாய் என்ன பேச முடியும்? ஒரு தடவை, ஆகாரமில்லாத பலவீனத்தில் கிணற்றடி யில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டாளாம். மண்டையில் நல்ல