பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்வா ళ tg3 கொண்டிருந்தாள். ஆகாயத்திலிருந்து இரண்டு நட்சத்திரங்கள் விழுந்துகொண்டிருந்தன. நிலையினின்று கழன்று சத்தமற்று சீறிக்கொண்டே இறங்குகையில் அந்தரத்தில் ஒன்று கலந்து ஒரே நட்சத்திரமாய் உதிர்ந்தன. வீட்டுக்குப் பின்புறம் அவள் கையை மெதுவாய்ப் பிடித்தேன். அதில் ஒரு சிறு நடுக்கம் இருந்ததோ! 'பச்சை மரத்தைப் பார்த்தாயோ?” என்றேன் காதண்டை, மெதுவாய், கேலியாய், மனசுக்குத் தைரியமூட்டும் பாவனையாய். அவள் பெருமூச்செறிந்தாள். என்ன விசனமோ அறியேன், 岑 求 苓 ஆவணி. புரட்டாசி. ஐப்பசி. வெளியில் நல்ல மழை பெய்கிறது. அடையாறு என் வீட்டுக்குப் பின்சுவர் வரையில்கூட எட்டிவிட்டது என்று நினைக்கிறேன். வானத்தினின்று குடம் குடமாய் ஊற்றுகிறது. பகலிலேயே விளக்கைப் போட்டுக் கொள்ளும்படியான இருள் கவிந்தது. பூர்வா. என் எதிரில் சோபாவில் சாய்ந்துகொண்டிருக்கிறாள். அவள் அவயவங்கள் உருண்டு திரள ஆரம்பித்துவிட்டன. உடலிலும் முகத்திலும் ஒரு தனி அழகு பொலிகிறது. மேனியில் ஒரு பளபளப்பு. அவளுடைய புரியாப் புன்னகையில் முன்னிலும் பன்மடங்கு மயக்கு. பேச்சில்- எங்கே அவள் முந்தியளவுகூட இப்பொழுது பேசுவதில்லை! தன்னுள் தானே மூழ்கிக் கிடக்கிறாள். "பூர்வா கலகலவென்று இரேன். குருட்டு யோசனை பண்ணிக்கொண்டிருக்காதே. பொம்மனாட்டிகள் கர்ப்ப காலத்தில் சந்துஷ்டியாய் இருந்தால் சந்ததியும் நன்றாய்