பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ம்மாவின் மடி நிறையக் காய், மடி பிதுங்கிற்று. ஆனாலும் அம்மாவுக்குத் திருப்தியில்லை. அவரைப் பந்தலின் இன்னொரு பக்கத்தில் ஏணியைத் திருப்பிப் போட்டாள். நாங்கள் பந்தலுக்கடியில் விளையாடிக் கொண்டிருந் தோம். நான், அம்பி, பாப்பா எங்கள் தலைக்குமேல் காய் கொத்துக் கொத்தாய்த் தொங்கிற்று. அதுவும் இந்தத் தடவை சரியான காய்ப்பு: தினம் மாற்றி மாற்றி அவரைக்காய் கறி, அவரைக்கா புளிக்கூட்டு, அவரைக்காய் பொரித்த கூட்டு, அவரைக்காய் பருப்பு உசலி அப்பா உள்ளேயிருந்து வந்தார், வழக்கப்படி வலது கையால் இடது விலாவைத் தடவிக்கொண்டும், தன்னுடம்பைத் தானே பார்த்துக்கொண்டும். & 4ஏண்டி !—” அம்மா அப்பொழுதுதான் ஒரு காலை ஏணியின் முதல் படியில் வைத்திருந்தாள். "στσότσογΡ “ரொம்ப இளைச்சுட்டேனாடி?”