பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 & லா. ச. ராமாமிருதம் கொண்டிருக்கிறது. உடலில் உயிருக்கே காரணமாய் இதயம் இருப்பது போல்.’ ஆனால் அந்தக் கணுவை, அதிலும் அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? அது யாருக்குக் கிட்டும்? கரும்பின் இதயம்; இதயத்தின் கரும்பு! 'சில சமயங்களில் வார்த்தையோடு வார்த்தை சேர்ந்தால், அல்லது மாற்றிப் போட்டால், புதுப்புது அர்த்தங்கள் எப்படி எப்படிப் பிறக்கின்றன! அப்படியும் தம்முள் இன்னமும் ஏதோ ரகஸ்யத்தை அடக்கிக்கொண்டு. உயிரோடு உயிர் கூடி உயிர் பிறப்பதுபோல்- அப்படியானால் வார்த்தைகளுக்கே உயிர் உண்டோன்னோ? - இப்படியெல்லாம் எண்ண எனக்குப் பிடிக்கின்றது. இப்படியெல்லாம் ஏன் எனக்கு எண்ணங்கள் ஒடுகின்றன? பொங்கல் என்றா? பொங்கலின் வெயிலுக்கே மனோகரமானதொரு மங்கல்- ஜாதி நாயனத்துடன் ஒட்டி ஒழுகும் ஒத்துப்போல, அதன் மருட்சியில் வழியில் துள்ளி ஒடும் ஆட்டுக்குட்டி மான்குட்டியாய்த் தோன்றுகிறது. எவனோ ஒருவன் எச்சில் துப்பிக்கொண்டு போகிறான்; முத்தைத் துப்பினாற்போல்தானிருக்கிறது! ஒரே குடும்பத்தின் பல ஆட்கள் மாதிரி, இன்று மாத்திரம் எல்லோரும் ஏதோ ஒரே காரியமாய்ப் போகிறார்கள், வருகிறார்கள். சாலையில் ஒரு மரத்தின் பின்னால் ஒருத்தி இடுப்புப் புடைவையைச் சரிப்படுத்திக்கொண்டிருந்தாள். என் பார்வை அவள்மேல் விழுந்த சமயம், அவள் மேலாக்கை மார்மேல் விசிறிப் போட்டுக்கொள்ளும் சமயம். ஆனால் இந்தக் காலைக் காற்று அதற்கு விடுகிறதா? எங்கிருந்தோ ஒரு ஊதல் கிளம்பி, அவள் கையிலிருந்து புடைவைத் தலைப்பைப் பிடுங்கிற்று. புடைவை பாய்மரத் துணிபோல் உப்பிப் படபட"வென அடித்துக்கொண்டது.