பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணுக்கள் o 159 திடீரென அவன் மேல்துணியை அவள் பிடித்து இழுத்து விட்டாள். எனக்குத் திக்கெனத் தூக்கி வாரிப்போட்டது. அவன் இடது கையில் முழங்கை வரை காணோம். நொண்டிகள் எவ்வளவோ பார்த்திருக்கிறோம். ஆனால் அவளுடைய திடீர்ச் செய்கையாலும், நான் அதற்குச் சற்றேனும் தயாராயில்லாததாலும் அவன் முடமையில் ஒரு பயங்கரம் ஏற்பட்டது. என் மனத்தின் துணுக்கு உடலையும் தாக்கிற்று. அவன் அவளைப் பார்த்த பார்வையில் அவளுக்கு என்னவோபோல் ஆயிற்று. நான் அங்கு இல்லாவிடில் அவளை அவன் கை மிஞ்சியிருப்பான். எல்லாம் சில விநாடிகள்தாம். சமாளித்துக்கொண்டுவிட்டான். சிரித்தான். குஸ்திக்காரன் செளரியம் பழகுவதுபோல் நொண்டித் தோளை நல்ல் கையால் தட்டிக்கொண்டான். “என்னா தம்பி, இந்தக் கையெப்பத்தி ஒனக்கென்ன தெரியும்? இது செஞ்சிருக்கற வேலையும் ஒடைச்சிருக்கற மூஞ்சியும் எண்ண முடியும்னா நெனக்கிறே? என்நாளுலே தம்பி, என்னுாரிலே நான் கில்லேடி! அப்பத்தி நெஞ்சுக் கனத்தை இப்பொ நெனச்சுப் பாத்தா பயங்காணுது. கோயில் உச்சவத்துலே எட்டு மூலைக் கோலமாப் பந்தங்கட்டி, எட்டு மூலையுங் கொளுத்தி, மானத்துலே ஒரு பனைமர உசரம் தூக்கி எறிஞ்சு கீளே வரப்போ நடுவுலே புடிச்சா பாத்தவங்களுக்கு ஒரு மூச்சு தப்பி வருந் தம்பீ!” குடிவெறி கண்டவன்போல் பேசினான். பேச்சு கொழ கொழத்தது. எனக்கு அதிசயமாயிருந்தது. “கை எப்பொழுதாவது பற்றிக்கொண்டதா?’ என்று கேட்டேன். அவன் முகம் விழுந்தது. "அப்படியிருந்தாத்தான் சமாதானமாயிருக்குமே!’