பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கணுக்கள் 4్మతి #69 மயக்கமும் மர்மமும் என்னை அழுத்துகின்றனவே தவிர முடிவு கிட்டியபாடில்லை. வாசலில் நிழல் தட்டிற்று. "வா வா, சீமதி ரெண்டு நாளா இந்தப் பக்கமே காணுமே!” என்று லக்ஷம் உள்ளிருந்தபடியே கூப்பிட்டாள். கையில் தன் பையனைப் பிடித்தவண்ணம் பூரீமதி உள்ளே நுழைந்தாள். "தங்கம் மாமியாத்துலே அப்பளாம் இடக் கூப்பிட்டா. போயிருந்தேன். முந்தாநேத்து ருக்கு மாமியாத்துலே அவா மாமனாருக்குத் தெவசம் அதுக்கு சமைக்கப் போனேன்.” பூரீமதியின் பிழைப்பே இப்படித்தான் நடந்து “இப்பொத்தான் உன்னை நெனைச்சேன்! நீ என்ன வேனுமானா நெனைச்சுக்கோ, சீமதி. நீ இல்லாட்டா ஒரு கை ஒடிஞ்சமாதிரிதான் இருக்கு காப்பிக்கொட்டையை வறுத்து வெச்சுட்டேன் அசடாட்டமா. ந.முத்துடறத்துக்கு முன்னாலே பொடிபண்ணியாகணுமேன்னு அப்புறம்தானே யோசனை தோணறது! ரெண்டுவாய்தான் காணும். நானும் வரேன். நீ இடி, நான் சலிச்சுப்பிடறேன். அப்புறம் சுடச் சுட கமகமன்னு போட்டுச் சாப்பிடலாம்-” மாம்பூவைக் காம்பு ஆய்வது போன்ற பேச்சிலும், யானை சுமந்துவரப் பின்னால் நரி முக்கிக்கொண்டே வந்ததாம்’ என்கிற தினுசில் வேலை வாங்குவதிலும் வேலை செய்வதிலும், லக்ஷத்திற்கு லக்ஷம் கொடுக்கலாம். சற்று நேரத்துக்கெல்லாம் உலக்கையிடி துவங்கிற்று. பக்கத்தில் அம்மிமேல் வைத்திருக்கும் பாத்திரங்கள் அதிரும் சப்தம் இனிப்பாய் ஒலித்தது. காப்பிப் பொடியின் மணம் 'கம்’மெனக் கிளம்பிற்று.