பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 & லா. ச. ராமாமிருதம் திருந்தது. ஆனால் கையெழுத்து வேறாயிருந்தது. விலாசத்தின் கையெழுத்து எனக்குப் பழக்கந்தானே! எனக்கு ஏதோ சந்தேகத் தட்டிற்று. நான் என்ன செய்தேன் என்பதை உணருமுன்னரே கடிதத்தைப் பிரித்துவிட்டேன். அதிலிருந்தவை நாலைந்து வரிகள்தாம். அவைகளைப் படித்து, அவைகளின் அர்த்தம் மூளையில் தோய்கையில் கொக்கிபோல் வளைந்து கூரிய நகங்களை விரித்துக் கொண்டு புலிப்பாதம் என் முகத்தில் அறைந்தது. கண்கள் இருண்டன. அறையும், ஜன்னலும், அதற்குப் புறத்தில் புலப்படும் தெருவும், எதிர்ச்சாரி வீடுகளும் அதிர்ச்சியில் ஆடி மிதந்தன. எதிர் வீட்டுத் திண்ணையில் சார்த்தியிருந்த ஒரு வண்டிச் சக்கரம் கிறுகிறுவென்று சுழன்றது. என் உடலிற்குள் சதைக்கடியில், பின் மண்டையிலிருந்து பீறி இரத்தம் வழிந்து ஒழுகுவதை உணர்ந்தேன். இரு கைகளாலும் மண்டையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டேன். ரேழியிலிருந்து திடும் திடும் என்று கேட்கும் உலக்கை என்மேல்தான் இறங்கிக் கொண்டிருந்தது. லக்ஷம் பூரீமதியிடம் கொல்லைப்புறத்திலிருக்கும் ஒற்றை வாழை மரத்தை வெட்டச் செய்த ஏற்பாட்டைச் சொல்லிக் கொண்டிருந்தாள். "அதுதான் குலை தள்ளிப்பிடுத்து, சீமதி இனிமேல் அதை நீ எத்தனை நாள்தான் வெச்சுக்கோயேன்- இருந்தும் ஒண்ணுதான்! அனாவசியமாய் இடத்தை அடைச்சிண்டு.” லக்ஷம் ஏன் இப்படி பூரீமதியின் பேரில் பயங்கரமான தீர்ப்பைக் கூறுகிறாள்? ஆனால் லக்ஷம் உண்மையைத்தானே கூறுகிறாள்! அப்படியானால் லக்ஷத்துக்கு மேஜைமேல் என்னெதிரில் கிடக்கும் கடிதத்தின் பொருள் ஏதாவது ஆச்சரியமான செப்பிடு வித்தையால், மனோதந்தி வாக்காய்த் தெரிந்துவிட்டதா? ஐயையோ அது பூரீமதிக்குத் தெரிய