பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் & #85 இப்பொழுது தன் பிள்ளைக்குக் கல்யாணம் நடக்கையில் கெளரிக்கும் தன் மணத்தின் நினைவு வருமோல்லியோ? எப்படியோ தன் கல்யாணத்தை யாருமே எப்பொழுதுமே மறக்காதபடி அவள் பண்ணிக்கொண்டு விட்டாள். சந்துருவுக்குக் கல்யாணம் நடந்தபோது அது குடும்பத் திற்கே ஒரு முக்கியமான சம்பவம். மற்றத் தங்கைகளையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்டு, அந்தக் கடனையும் அடைத்துவிட்டுத் தலை நிமிர்கையில் சந்துருவுக்கு முப்பது வயதாகிவிட்டது. அதற்குமுன் எந்தக் கட்டிலும் பட மறுத்து விட்டான். ஆனால் அப்புறமும் தன் மணத்தைத் தள்ளிப் போட நியாயமில்லை. தகப்பனார் காலமாகிவிட்டார்; தாய்க்குத் தள்ளாமை; ஜானா பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண் டிருந்தாள். ஆகையால் கிழவியைக் குந்த வைத்துச் சாதம் போடவும், வீட்டுக்கு வந்தவர்களுக்குக் குங்குமச் சிமிழ் நீட்டவும் மருமகள் வர நாளாகிவிட்டது. வேளையும் வந்துவிட்டது. மன்னி கழுத்தில் மூன்றாம் முடிச்சைப் போடா விட்டாலும், மன்னி வந்தாள் என்ற சந்தோஷத்திலேயே ஜானா குழந்தையாகிவிட்டாள். அருமைச் சந்துருவுக்கு ஒரு அகமுடையாள. ராமதுரை இப்போது ஆயிரம் செல்லமாயிருந்தாலும் எப்படியும் சந்துருவின் அருமை ஆகமாட்டான். இதை ஜானா தனக்கே ஒப்புக்கொள்ளுகையில் அவளுக்குச் சந்துருவின் தனி முக்கியத்தில் அதயைகூட உண்டாயிற்று. ஏனெனில் சந்துரு, திலோமம் செய்து, குலதெய்வத்தின் கோவில் வாசற்படியை நெய்யால் மெழுகி, ராமேசுவரம் போய்க் கடுந்தவங் கிடந்து, ஒரே பிள்ளையாய், முதல் இதயபூர்வத்தில் ஜனித்தவன். இந்த முக்கியம், அவன் அவர்கள் கண்ணெதிரில் வளருகையில் அவன் இயக்கும் ஒவ்வொரு செயலிலும், அவனில் இயங்கும் ஒவ்வொரு உணர்ச்சியிலும் தன்னைத் தெரிவித்துக்கொண்டே 43