பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 & லா. ச. ராமாமிருதம் யிருந்தது. ஒருவேளை நாளாக ஆக அவனே அதை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, அது போகப் போகப் பெருகித் கொண்டேதானிருந்தது. சந்துருவுக்கு நேர்ந்த மாதிரி குடும்பப் பொறுப்புகளும் பாரங்களும் ஒருவேளை இன்னும் கொடியவையாய்க் கூட வெகுபேர் சிறுவயதிலேயே வகித்திருக்கிறார்கள். ஆனால் இந்த நாயகத்தன்மை- விஸ்தரிக்க இயலாத இந்த ஒளிஎல்லோருக்குமே கிட்டுவதில்லை. அதாவது, சூரியனைச் சுற்றி மற்றக் கிரகங்கள் சுற்றுகிற மாதிரி- கொதிக்கும் பாலிலிருந்து மணம் கமழ்கிற மாதிரி. அது பிறர் சூட்டுவதா, அல்லது பிறவி யுடனேயே பிறந்ததா? சில சாயல்களில் சந்துருவைப் பார்க்கையிலோ, கேட்கையிலோ, பிறர் அவனைப் பற்றிச் சொல்வதைச் சிந்திக்கையிலோ அவளுக்கு அடிக்கடி கோயிற் சிலையைத்தான் அவன் நினைவு மூட்டினான். அதன் லக்ஷணங்கள் எவ்வளவு நுணுக்கமாய்ச் செதுக்கியிருப்பினும், அதன் புன்னகை எவ்வளவுதான் இன்பமாயிருந்தாலும், அது உருவாகி ஆதிக்கல்லின் உரத்தையும் உக்கிரத்தையும் தாங்கிக் கொண்டுதான் நிற்கும். ஆம். சந்துரு ஒரு உக்கிரப் பொருள். அவன் உணர்ச்சிகள் இரண்டுங் கெட்டான் உணர்ச்சிகளல்ல. நல்லவையோ கெட்டவையோ, கண்டிப்பாய் அவை சாதாரணமானவை. யில்லை. விழுதுகள் இறங்கியதும் எப்படி பூமியில் வேரூன்றி விடுகின்றனவோ, அம்மாதிரி அவனாலேயும் கலைக்க முடியா கனமான உணர்ச்சிகள். சந்துருவுக்கும் தனக்குமிடையில் உள்ள நெருக்கத்தை ஜானா எண்ணமிட முயல்கையில், அதற்கு முடிவேயில்லாத் அகன்ற வான் வீதிகளும், ஆழமான நதிகளும் அதில் பாய்ந்து ஓடின. உடன்பிறப்பெல்லாம் ஒரே தொப்புள் கொடி என்பது இதுதானோ? ஆனால் மற்றத் தங்கைகளும் உடன்பிறப்புத்