பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 & லா. ச. ராமாமிருதம் மிதித்த மாதிரி கடைசியில் நான் என்னையே சுற்றிச் சுற்றி இடl றன். என் மார்பே வெடித்துவிடும் போலிருக்கையில் நல்ல வேளையாய் விழித்துக்கொண்டேன். ஜானா, இதற்கு அர்த்தம் உண்டா?” - சொல்லிக்கொண்டே வருகையில், சந்துருவுக்கு முகம் சிவந்துவிட்டது. நடு நெற்றியில், நீல நரம்பு கிளைவிட்டுப் புடைத்தெழுந்தது. அந்நிலையில் அவனைப் பார்க்கையில் அவளுக்கு ஏதோ வேதனை பண்ணிற்று. “மன்னிகிட்டே சொன்னையா? அவள் என்ன சொல் கிறாள்:” அவன் சிரித்தான். “அவள் என்ன சொல்லுவாள்? நான் சொன்னதையே அவள் வாங்கிக்கொண்டாளோ இல்லையோ? அவளுக்கு ஒரே தூக்கக் கலக்கம். ஏதோ சினிமாவுக்கு என்னை விட்டுட்டுப் போயிருப்பேள். அதன் பின்னணி சங்கீதம் மனசில் பதிஞ்சிருக்கும் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டு விட்டாள்.” அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அவனுடைய கனவு அவள் நெஞ்சிலும் ஏதோ இம்சை பண்ணிற்று. "நாங்கள் யாராவது அந்தக் கனவில் வந்தோமா? நான், அம்மா, மன்னி-” "இல்லை, நீங்கள் ஒருவருமே இல்லை. பெருமூச்செறிந்து சந்துரு திரும்பினான். ‘ஒருவேளை கெளரி சொல்வதும் சரிதானோ, என்னவோ? ஒண்ணும் இல்லாததைப் பிரமாதம் பண்ணிக் கொள்கிறேனோ என்னவோ?-’ “அட! அதுக்குள்ளே மன்னி உன்னைத் தேடிண்டு வந்துட்டாளே!”