பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் త> 2怜 இரண்டு நாள் கிடந்தான். விபூதிப் பட்டைபோல் நெற்றியை உழுதுகொண்டு மூன்று வரிகள் விழுந்திருந்தன. “ஜானா, வந்தயா? அம்மாடி, உன் அம்மா வயத்துலே பாலை வார்த்தயா? நீங்கள் எல்லாம் இனிமேலாவது நல்ல படியா இருக்கணும், அம்மா! நீ பிழைச்சது புதுப் பிறப்புத்தான். உங்க வீடு ராஜ குடும்பமாயிருக்க வேண்டியது. நல்ல மரத்துலே புல்லுருவி பாஞ்சாப்போலே உங்களுக்குன்னு கஷ்டம் வாய்ச்சிருக்கு!” நாம் உலகத்தை விட்டு ஒதுங்க முயன்றாலும் உலகம் நம்மை விட்டு விடுவதில்லை. "உன் மன்னிச் சிறுக்கி சொல்றாளாம். இருக்கறத்துக் குள்ளே சமத்தாய் ஆஸ்பத்திரிக்குப் போய்த் தொலைஞ்சாளே என் நாத்தனார், அப்படியே செத்துத் தொலையப்படாதோ? மறுபடியும் வந்து சேர்ந்துட்டாளா? இதுகளுக்கெல்லாம் ஏன் பகவான் உசிரை இரும்பாலே அடிச்சுப் போட்டிருக்கானோ தெரியல்லே' என்றாளாம்." “జ్ఞా!" அவளுடைய மன்னி வீட்டுத் தூற்றல் முன்போல அவ்வளவு உறுத்தவில்லை. அவளுக்கே ஏதோ சில எல்லை களைக் கடந்துவிட்டாற்போல் ஒர் உணர்ச்சி. உள்ளுற ஏதோ ஒரு வெற்றி வெறி. 'உன் மருமான் அப்படியே உன் அம்மாவை உரிச்சு வச்சிருக்கானாம். கறுப்புத்தானாம். உன் அண்ணா இன்னும் போய்ப் பார்க்கலையா? எங்கே போறார், பிள்ளைப் பாசம் இழுத்தால் தானா ஒருநாள் வரார். நானா இனி போக மாட்டேன்’ என்று சொல்லிண்டு திரியறாளாம்! இவ்வளவு அசடைக் கட்டிண்டு அழறதும் கஷ்டந்தான்.” அந்த ஐந்து வருஷங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் எப்படிக் கழிந்தது என்பதற்கு அவளால் கணக்குச் சொல்ல முடியும்.