பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2岱 * லா. ச. ராமாமிருதம் பதுங்கிக் காத்திருந்த மிருகம்போல் தாய்மை உணர்ச்சி அவன், மேல் பாய்ந்து நெஞ்சை நெருக்குகையில் ஜானா அப்படியே ரேழிக் கதவில் சாய்ந்துவிட்டாள். கண்ணிர் மாலை மாலை யாய்க் கன்னங்களில் வழிந்து குளிர்ந்தது. கைக் கந்தையிலிருந்து இழை கோலமாவு சொட்டுச் சொட்டெனச் சொட்டிற்று. பாதச் சங்கிலியின் சதங்கை சலசலத்தது. வெள்ளி அரைஞாண். பட்டை தீட்டிக்கொண்டு வளைந்து வளைந்து ஒடிற்று. ஜானாவுக்கு இப்பொழுது எதுவுமே தாங்க முடிவதில்லை. சாவு தப்பினாலும் உடல் ஒட்டைச் சட்டிதான். எப்படியும் வீம்புக்கு வாழும் உயிர்தானே! அவள் தன் மருமானைப் பற்றி நினைப்பதுண்டென்றாலும் இம்மாதிரி இதுவரை நேர்ந்ததில்லை. ஆனால் அவள் கொட்டகை மேடை அன்றிலிருந்து வெறிச்சென்றில்லை. இன்னும் அவள் கண்ணால் கண்டிராத ராமதுரை அவள் மன அரங்கில் ஆட ஆரம்பித்துவிட்டான். காலி நாற்காலி சோபாக்களிடை ஜானா ஒண்டியாய், சிரித்துக் களிக்க ஆரம்பித்து விட்டாள். எப்படியும் இது இப்படியே இருக்க முடியாது. என்றேனும் ஒருநாள் வருவான் அல்லவா? தனக்காகக் காத்திருக்கச் சொல்லாமல் சொல்லுகிறாள், அவ்வளவுதானே! "அத்தே நான் வரேன் இரு. அத்தே நான் ஜூட்- ஒளிஞ் சிண்டிருக்கேன். என்னைக் கண்டுபிடி! அத்தையாலே கண்டு பிடிக்க முடியல்லியே! முடியல்லியே! நானே வந்துத்தேனே! மடிலே வந்து வீந்துத்தேனே!-” அப்படி அவன் வந்த நாளும் வந்தது. அன்று ஏதோ விடுமுறை. ரேழியில் சந்துரு பக்கத்து வீட்டுக் குழந்தையை மடியில் வைத்து அத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான். வாசலில் ஒரு ரிக்ஷா வந்து நின்றது. 'அண்ணா, மன்னீடா!'