பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

225 ‌‌‌‌ லா. ச. ராமாமிருதம்

  "திருட்டா? யார்? யார்?" 
  "யார், யார் என்றால் உங்ககிட்டே சொல்லிக் கொண்டு போவானா? எல்லாம் அவரே வழிகூட்டியனுப் பிச்சாரே அந்த ஆசாமிதான் கை வெச்சிருக்கணும். இல்லாட்டா அவனுக் கென்னையா அவ்வளவு அவசரம், வண்டி புறப்பட்ட சமயத்தில் இடிச்சுப் புடிச்சுண்டு இறங்கும்படியா?-"
  "இதே மாதிரிதான் ஸார், நான் பத்து வருஷங்களுக்கு முன்னால் விருத்தாசல மார்க்கத்தில் போய்க் கொண்டிருக்கையில்-”
  “- டாமிட் டிக்கட், டிக்கட்-” ஸ 
  "ஒருத்தரையும் குற்றம் சொல்வதற்கில்லை. இந்த முழி பிதுங்கும் கூட்டத்தில் அவாளவாள் ஜேபியைப் பற்றியே சந்தேகம் வந்துவிடுகிறது- தன் பையென்று நினைத்து இன்னொரு சட்டையில் கைவிட்டுவிட்டான்! அவ்வளவுதான்.
  " வண்டியின் ஊதல் எல்லாரையும் பரிஹசிக்கிறது. விதியின் விலக்க முடியாத கதி போன்றிருக்கிறது, வண்டி ஒரே திக்கில் செல்லும் தீர்மானம்.
  “டேய், சொன்னத்தைக் கேளு- நீ ரொம்ப எட்டிப் பாக்கறே- காலை வாரி விட்டுடப் போறது-”
  "நீ என் காலைப் புடிச்சுக்கோ- அதைவிட உனக்கு என்னடி வேலை?”
   அந்தப் பக்கம் முழுதும் இதைக் கேட்டதும் ஒரே சிரிப்பு. 
   பேஷ்- பிழைக்கிற பிள்ளைதான்! என்ன இருந்தாலும் ஆண்பிள்ளைகள் ஆளப்பிறந்தவர்கள்தான்.”
   பிள்ளையைப் பெற்றவர்களுக்கு உள்ளுற ஆனந்தம் பொங்குகிறது.
   “என்னடா, உனக்கா உனக்கு இன்னமும் சிசுருஷை பண்ணிண்டு இருக்கணுமா! அவளுக்குக் கலியாணம் ஆன