பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230 லா. ச. ராமாமிருதம் சுருக்கப் போய்ச் சேர்ந்துவிட மாட்டோமா!' எனும் உள்ளப் பதைப்பில், உயிரே ஊசலாடுகிறது.

  "ஐயோ நான் படும்பாடு சிவனே- உலகோர், நவிலும் பஞ்சுதான் படுமோ- சொல்லத்தான் படுமோ!-”
  "இதென்ன கஷ்டம்! நாம் இடமில்லாமல் படும் கஷ்டம் போதாதென்று பிச்சைக்காரர்களின் உபத்திரவம் வேறேயா? 

இந்தக் கும்பேனிக்காரன் எல்லாத்துக்கும் ஒரு வரி போடறானே, இவாள் மேலே ஒண்னு போடப்படாதோ?”

  "ஏன் ஸ்வாமின்னு, உங்களுக்கு அவ்வளவு தயாளம்: அவன் வயிற்றுக் கொடுமை, ஏதோ கத்திவிட்டுப் போறான்." 
  “ஏதேது அவனுக்குக்கூட வராத கோபம் பெரியவாளுக்கு வராப்போலேயிருக்கு பெரியவா ஏதேனும் வாரிசோ?”
   “வாரிசு என்ன சுவாமி? பார்க்கப் போனால் உலகத்திலே எல்லாருமே பிச்சைக்காராள்தானே! நான் ஒரு பிச்சைக்காரன், நீரும் ஒரு பிச்சைக்காரன்.”
   “என்னடா சொன்னாய் என்னை! நீ வேனுமானால் பிச்சைக்காரனாயிரு- என்னை- பல்லை-”
  "சீச்சீட”
  "சூ-சூ-- இது ஒரு சமாதானக்காரர். வண்டி முழுதும் ஏகக் கூச்சல், களேபரம். 
  “தடக்-தடக்-தடக்- இது வண்டி 
  “என்ன சிரிக்கிறேள்?” 
   “என்னத்துக்கு அழவேண்டும் என்றுதான் சிரிக்கிறேன்.”
  “என்ன புதிர் போட ஆரம்பிச்சுட்டேளே?” 
  "புதிரேயில்லை. எல்லாம் வெட்ட வெளிச்சம்தான்.எல்லாம் கண்ணெதிரே நடக்கிறதுதான். ஒரு சிமிழுக்குள்ளேயே