பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/32

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

o 22 * லா. ச. ராமாமிருதம் அம்மாள் சொன்னதற்குத் தகுந்தாற்போல், கிழவருக்கு உடம்பு வரவர ஒடுங்க ஆரம்பித்துவிட்டது. ஜனனியை எங்கே யாவது கையைப் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்னும் கவலை ஓங்க ஆரம்பித்துவிட்டது. அம்மாளுக்கு ஜனனி வந்த ராசி எல்லாம் மறந்து விட்டது. "வாசல்லே போற சனியனை விலைக்கு வாங்கினாப்போலே என்கிற பெரியவாள் வாக்கு சரியாப் போச்சு. நன்னாக் கட்டிண்டு அனுபவிங்கோ' "அடியே, இன்னும் நாலு நாள் கழித்துப் போகும் என் உயிர் உன்னால் இப்பவே போயிடும்போலே இருக்கிறதே!” "நீங்க நன்னா இருங்களேன். என் ஆயுசிலேயும் பாதி கொடுக்கிறேன். நாலுபேர் நடுவுலே தாலிகட்டி, சாந்தி சீமந்தம் எல்லாம் பண்ணிப் பெத்து வளர்த்த குழந்தையைப் பண்ணிக் கிறத்துக்கே, ஆயிரம் ஜோஸ்யம் பார்த்து, அழகு பார்த்து, அந்தம் பார்த்து, தெரிஞ்சு விசாரிச்சு, தெரியாமெ விசாரிச்சுப் பண்ணிண்டுட்டு, அப்புறங்கூட அது சரியாயில்லே, இது சரியாயில்லே'ன்னு குத்தம் படிக்கற நாளிலே, எங்கேயோ வழியிலே கண்டெடுத்த பொண்ணை எவன் தலையிலேயாவது லேசிலே கட்டிவிட முடியுமா, என்ன?” அவள் வாக்கு அசரீரிதான். ஐயர் தம் வளர்ப்புப் பெண் கல்யாணத்திற்குச் செய்யும் முயற்சிகள் எல்லாம், உருவாவது போல் ஆகி, திரளும் சமயத்தில், பொட்டென உடைகையில், அவருக்கு உள்ளுறத் திகிலே உண்டாயிற்று. ஒரு பெண் பிறந்தால், அதற்கு ஓர் ஆண் படைத்துத்தான் இருக்கவேண்டும் என்னும் கடைசி நம்பிக்கை அல்லது நம்பிக்கையற்ற திடந்தான் அவரை உந்திக்கொண்டு போயிற்று. ஜாதகக் கட்டைத் தூக்கிக் கொண்டு எங்கெங்கோ வெளியூரெல்லாம் சுற்றி வந்தார். அப்புறம் ஒருநாள், "எல்லாம் வேளை வந்தால்தானே வரும்! நாம் மாத்திரம் அவசரப்பட்டால் முடியுமா? பார்,