பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 * லா. ச. ராமாமிருதம் 'அறுபது நாழியும் சண்டை போட்டுண்டு!” “சரியாப் போச்சு. ஓம் என்று ஒரு மந்திரம் சொல்லி யாகல்லை-?” "நாம் எல்லாம் அப்படி இருக்கமாட்டோம். நான் உங்களைப் பார்த்தப்புறம் உங்களையேதான் வரிப்பேன்னு அம்மாவோடு சண்டித்தனம் பண்ணிச் சாதிச்சுண்டிருக்கே னாக்கும்! உங்களுக்கும் என்மேல் அப்படித்தானே?” "இப்போ என்ன அதைப்பத்தி?” மடியில் படுத்துக்கொண்டே அவள் தலையை பலமாக ஆட்டினாள். அதுவும் ஒரு கவர்ச்சியாய்த்தான் இருந்தது. "ஒண்ணுமில்லே, நான் சொல்றேன். நான் செத்துப் போனால், நீங்க ரெண்டாந் தடவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேளே? நான் தெய்வமாயிருந்து பார்த்துண்டு இருப்பேன்.” "ஏன், பிசாசாக இருக்கக் கூடாதோ?” அவன் கிண்டலைக் கவனியாமலே அவள் பேசிக் கொண்டே போனாள். “நான் செத்துப் போன இடத்திலே ஒரு கோரி கட்டுவேளா?” “மும்தாஜ் மஹாலாக்கும்!” அவள் குரலில் ஏமாற்றம் தொனித்தது. "ஆமாம். நம்ம ஜாதி பொசுக்கற ஜாதி; புதைக்கிற ஜாதியில்லை. போனால் போறது. நான் போனப்புறம் என்னிக்காவது நெனைச்சுக்கக்கூட மாட்டேளா?” "சரி சரி, கொஞ்சம் சமத்தாயிரு” "சொல்லுங்கோன்னா-?” "நீ செத்துப்போன பிறகு நான் இரண்டாந்தாரம் கட்டிக் கொண்டு எப்படி நடப்பேன் என்பதைப்பற்றி இப்பொழுது