பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ళ லா. ச. ராமாமிருதம் "இருந்தும் வாழ்க்கை இன்னதுதான் என்று ஒரு முடிவு கட்ட இயலவில்லை. ஒரு நிச்சயத்துக்கு வருவதற்குள் அதற்கு நேர் முரணாக இன்னமும் அதுவரையில் புலன்படாத பல அம்சங்கள் தலைகாட்டுகின்றன. வாழ்க்கை பிடிபட மறுக்கின்றது. “ஒவ்வொரு சமயம், வருஷங்கள் விரைவது தெரிய வில்லை. இன்று தள்ளாமையாயிருந்தாலும் ரத்தத் திமிரில் துள்ளி விளையாடியதும் தூக்கியெறிந்து பேசியதும் நேற்று மாதிரி இருக்கின்றன. “ஒவ்வொரு சமயம் ஒருநாள் நகர்ந்துபோவது நரக வேதனையாக இருக்கிறது. "வாழ்க்கையின் பெரிய அதிசயம் யாதெனில், சகல ஜீவராசிகளும் அதன் அதன் பிறப்புக்கும் பிழைப்புக்கும் முடிவிற்கும் ஆதாரமாய் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதே அதன் அதன் வாழ்க்கையையும் தனித்தனியாய்ச் சோதித்தால் தம்முள் தாமே நிறைந்திருப்பினும், எல்லாமே உலகத்தின் வாழ்க்கையின் ஒரே கோவையில் அடங்கியவைதாம். சம்பவங்கள் தனித்தனியாயும், ஒன்றுக்கொன்று சம்பந்த மற்றவையாயும் அறுந்து தொங்கினாலும் எல்லாவற்றிலும் ஒரு காவியத் தொடர்பு ஊடே மறைந்திருக்கிறது. 'ஆயினும் அவன் அவனுக்கு அவன் அவன் பெருமையும் துக்கமுந்தான் பெரியவை. எல்லாம் நான் போனாலன்றோ தெரியப்போகிறது:- ஒவ்வொருவனுக்கும் இதே எண்ணந் தான். உலகம் தன் இஷ்டப்படியோ, அல்லது தான் எதிர் பார்த்தபடியோ நடவாததால் அதை விட்டுப் போவதற்கும், அதே சமயத்தில், தான் போன பிறகு உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக, அதில் இருப்பதற்கும் ടുങ്ങ്,