பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/7

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தபஸ் நண்ப, இது உனக்கும் எனக்கும் இடையில் ஒரு வார்த்தை உனக்கு இதைச் சொல்ல வேண்டுமென்று வெகுநாட்களாய்க் காத்துக்கொண்டிருந்தேன். இப்போது வகையாய் மாட்டிக்கொண்டோம். இப்புத்தகத்தில் வரும் பெயரோ பாத்திரங்களோ ஒருவரையும் குறிப்பிடுவனவல்ல என்ற சம்பிரதாயச் சொல் ஒரு பெரும் புளுகு என்று அறிந்துகொள். ஏனெனில், எவரும் எவரையும் குறிப்பிடாது இருக்க முடியாது. தெய்வமே ஒரு குறிப்பிட்ட பொருள்தான். அந்தக் குறிப்பைச் சுற்றிச் சுற்றி நாம் இயங்கி, அதனால் குறிக்கப்பட்ட பொருள்கள் ஆய்விட்டோம். வாழ்க்கையில் இறப்பும் பிறப்பும் இருக்கும்வரை இந்தத் தன்மையை விட்டு நாம் தப்ப முடியாது. நாம் தெரிந்தோ தெரியாமலோ- இஷ்டப்பட்டோ இஷ்டப்படாமலோ, அர்ப்பணமானவர்கள். இந்த அர்ப்பணிக்கப்பட்ட தன்மையை நாம் அங்கீகரித்துக் கொண்டு விட்டோமானால் அவரவரின் உண்மையின் உள்சத்தை ஒரளவு இப்பவே புரிந்துகொள்ள முடியும். இதனால், நம்மையும் ஆட்டுவித்துக் கொண்டு நம்முடன் தானும் ஆடிக்கொண்டிருக்கும்