பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 * லா. ச. ராமாமிருதம் யில்லே?" என்று கேட்டுக்கொண்டே என்மேல் சாய்ந்தாள். அவள் குரல் வெறும் மூச்சாகவே ஒடுங்கிப் போயிற்று. உடுக்கு அடித்து ஆவேசத்தை வரவழைத்துக் கொள்பவன்போல இமைகள் அரைக்கண் மூடி விழிகளின் ஒளிமங்கிப் படலம் படர்ந்தது. $4.ஒேஹா p" நெட்டிபோல் கனமில்லாமல்தானிருந்தாள். கழுத்தில் இரட்டைவடச் சங்கிலிகள் இரண்டும், ஒரு வைரச் சங்கிலியும் மின்னின. ஒவ்வொரு கையிலும் இரண்டு ஜோடி தங்க வளையல்கள். அவைகளைத் தொட்டுக்கொண்டே நான் ஏது, கையின் அளவைவிடப் பெரிதாயிருக்கிறதே! என்றேன். சிரித்துக்கொண்டே அதுதான் இப்பொழுது பாஷன் என்றாள் அவள். நான் அவள் பார்வையைச் சந்திக்காமலே, 'உனக்கும் எனக்கும் அந்தஸ்தில் எவ்வளவு வித்தியாசம் என்று தெரியுமோ?- என்றேன். "இருந்தால் என்ன?” "அப்படியானால் உன் தகப்பனார் இப்படி உன்னையும் என்னையும் பார்க்கச் சம்மதிப்பாரா?” “அதைப்பற்றி இப்போ என்ன?” “அவ்வளவு லேசாய் ஒதுக்கிவிடற விஷயமா?” "வங்கி வங்கியாய்க் கத்தரித்திருக்கும் நெற்றி மயிரை லேசாய் ஒதுக்கிக்கொண்டு, எங்கேயோ பார்த்துக்கொண்டு ‘வாழ்க்கை ஒரு விளையாட்டு. நாளைய கவலை நாளை என்றாள். "இல்லை. விளையாடும் சமயத்தில் விளையாட்டு; வினையாயிருக்கும் சமயத்தில் வினை-” “என்னை என்ன பண்ணச் சொல்லுகிறாய்?”