பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/10

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



9
இத்தகைய சூழ்நிலையை வளர்க்க மத்திய சர்க்காரும் தங்கு

தடையின்றி பொருளுதவிகளும் இதர உதவிகளும் புரிதல் வேண்டும். இந்த நிலைமை நடப்புக்கு வந்துவிட்டால், மொழிப் பிரச்னையில் இன்று ஏற்பட்டுள்ள கடிய கொடிய சிக்கல் நிச்சய மாகத் தீர்ந்துவிடும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

நம்மைப் பொருத்த மட்டில் தமிழ் இருக்க வேண்டிய இடங்

களில், தமிழை இருக்கவிடாமல் செய்து இன்றும் அநீதமாக இருந்துகொண்டிருக்கும் மொழி எது? சட்டசபையிலும், சர்க்கார் காரியாலயங்களிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், விஞ்ஞான தொழில்நுட்பக் கல்விகளிலும், நீதி மன்றங்களிலும், இன்னபிற இடங்களிலெல்லாம் ஆதிக்கம் வைப்பது இன்றும் ஆங்கிலமே. சுதந்திரம் கிடைத்து, பத்து ஆண்டுகளுக்குப் பின்னா லும், இன்னும் ஆங்கிலமே இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

மேற்கூறிய இடங்களிலெல்லாம் இந்தி இன்று ஆதிக்கம்

வகிக்கவில்லை என்பது ஒரு யதார்த்தம். ஆகவே, பிரத்தியட்ச உண் மையை நிதானமாகக் கணக்கிலெடுத்துப் பார்த்தால், பொது மக்க ளுடைய ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்கிற கண்ணோட்டத் துடன் பார்த்தால், கோடானுகோடி மக்களின் பக்கத்தில் நின்று கொண்டு, மொழிப் பிரச்னையை நாம் பார்த்தால், தமிழ் மொழியின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு இன்னும் ஆங்கில ஆதிக்கம்தான் பெரும் எதிரி என்று விளங்காமற் போகாது.

ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை
கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தமட்டில், எந்த மொழியிட

மும் துவேஷமில்லை. ஆங்கிலத்தைப் பொருத்தமட்டில் துளிகூட துவேஷம் கிடையாது. ஷேக்ஸ்பியரின் ஆங்கிலத்தை, பெர்னாட்ஷா வின் ஆங்கிலத்தை, ஷெல்லியின் ஆங்கிலத்தை, கீத்தின் ஆங் கிலத்தை, பைரனின் ஆங்கிலத்தை, சிறந்த இலக்கியங்களையும் சிறந்த விஞ்ஞானச் செல்வத்தையும் உலகுக்கு அளித்துள்ள ஆங் கிலத்தை நமது சகோதர மக்களான ஆங்கில மக்களுடைய மொழி யான ஆங்கிலத்தை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை. எந்த ரீதான புத்தியுடையவனும் எதிர்க்கமாட்டான்.

கம்யூனிஸ்ட் கட்சி ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை. ஆங்கிலம்

இந்த நாட்டில் இருக்கிற இருப்பை, அதாவது தாய் மொழி (தமிழ்) இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிற இருப்பை, அதாவது ஆங் கிலத்தின் நியாயமற்ற, பிரதேச மொழிகளின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு பேரிடையூறாக இருக்கும் ஆதிக்கத்தைத்தான் கம்யூ