பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/18

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



17

கழகப் போராட்டமும்" என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன்.

பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப்

புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பும், தேசியக் கொடி எரிப்பும் ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈ. வெ. ரா. பெரியாரால் நடத்தப்படுகிற திராவிடக் கழகப் "போராட்டம்" தமிழகம் முழுவதிலும் மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.உச்சிக் குடுமி கத்தரிப்பு, பூணூல் அறுப்பு முதலிய "அறப்போர்" முறைகள் இந்த நகரத்தில் தான் செயல்படுத்தப்பட்டன.

இக்கூட்டத்துக்கு வரும்போது அருகாமையிலுள்ள ஒரு

ஒட்டலில் நுழைந்துவிட்டு வந்தேன். அங்கு ராமசாமி பெரியாருக்கு தண்டனை விதிக்கப்பட்டதைக் கேட்டுவிட்டு தலைகால் புரியாத ஆவேசத்தோடு தூள் பறத்திக் கொண்டு வந்த சிலர், மூன்று 'ட்யூப் லைட்'களை கல்மாரி பொழிந்து தூள் தூளாக்கி விட்டார்கள் என்று புகார் கூறப்பட்டது.

பீமநகருக்குச் சென்று பாருங்கள். முன்பு ஆர். டி. ஓ. இருந்த

வீட்டின் சுவரில் ஒரு சித்திரம் வரையப்பட்டிருக்கிறதாம். அந்தச் சித்திரம் தாரினால் எழுதப்பட்டிருப்பதால் சுலபத்தில் அழிந்து போகாது இன்றும் நாளையும் நீங்கள் சென்று பார்க்கலாம். அந்தச் சித்திரம் என்ன தெரியுமா? உச்சிக்குடுமியுள்ள ஒரு பார்ப்பான் போல் ஒரு படம் வரைந்திருக்கிறார்கள். உச்சிக்குடுமி கத்தரிக்கப் படுவதுபோல் காட்டப்பட்டிருக்கிறது. கத்தரிக்கும் இடத்திலிருந்து இரத்தம் பொலபொல என வடிவதையும் காட்டியிருக்கிறார்கள். அரசியல் சட்டப் புத்தகம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எரிக்கப்பட்டதுபோல் இந்நகரத்திலும் எரிக்கப்பட்டது.

ஆகவே, திராவிடக் கழகப் போராட்டத்தின் பல்வேறு

நடவடிக்கைகளை நேருக்கு நேர் கண்டு அனுபவித்தவர்கள் திருச்சி மக்களாகிய நீங்கள்.

இந்தப் போராட்ட முறை" சரியா, தப்பா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின்

லட்சியம் என்ன என்பதைக் கவனிக்கவேண்டும். ஜாதி ஒழிப்புக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ. வெ. ரா. பெரியார் கூறுகிறார்.

இங்கு ஜாதி ஒழிப்பைப்பற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையை முதலில் சொல்லி விடுகிறேன்.
அடிமைப்படுத்துதல், சுரண்டுதல், ஏமாற்றுதல் முதலிய

அடிப்படை சமூகக் கேடுகள் துளியும் காணக் கிடையாத ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின்