பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/8

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
7



5000 அங்கத்தினர்களாக இருந்த தமிழ்நாடு கட்சிப் பகுதி 20 ஆயிரம் அங்கத்தினர்களைக் கொண்டதாகவும் வளர்ந்திருக்கிறது."

"தோழர்களே! சென்ற சில ஆண்டுகளில் 150-க்கு மேல்

புதிய கண்டு பிடிப்புகள் கண்டு பிடித்துள்ளோம் என்று சோவியத் நாட்டார் இன்று நியாயமாகவே பெருமையடித்துக் கொள்ளுகிறார் கள். இந்தப் பெருமைக்குக் காரணம் என்ன? கார்க்கி அன்று கூறியதுபோல், நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி, பாமரத் தன்மை யில் மூழ்கிக் கிடந்த கோடானு கோடி பொதுமக்களின் சிருஷ்டித் திறன் கட்டவிழ்த்து விடப்பட்டதே காரணம் என்பதை நாம் உணரவேண்டும். இதற்கு முக்கிய காரணம், நவீன உலகியல் அறிவு முழுவதும் மிகக் குறுகிய காலத்தில் வெகு விரைவாக பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ததே! தாய் மொழியால் மாத்திரமே பாமர ஜன சமுத்திரத்தைக் கப்பிக் கிடக்கும் அறி யாமைக் காரிருளைக் கிழித்தெறிந்து, அறிவியல் ஒளி வீசச் செய்ய முடியும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்கமுடியாது.

இந்த நம் கால சரித்திர உண்மையை, பிரத்தியட்ச உண்

மையை நாம் கவனத்தில் வைத்துக்கொண்டு மொழிப் பிரச்சினை யைக் கவனிக்கவேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்ளு கிறேன்.

மொழிப் பிரச்சினையில் நாம்
தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு அமளி துமளிப்படுகிறது. பல்

வேறு கட்சிக்காரர்களும், கருத்தோட்டமுடையவர்களும் ஒன் றித்து நின்று, இந்தி நுழைவுக்கு எதிராகக் குரல் எழுப்பு கிறார்கள், இந்திக்கு எதிராக ஆங்கிலப் பெருமையை பல "பெரி யார்கள் " உயர்த்திப் பிடிக்கிறார்கள் "இந்தி ஒரு நாளும் கூடாது? ஆங்கிலமே எந்நாளும் வேண்டும்! " (Hindi Never! English Ever!) என்ற கோஷம் செவிடுபடுகிறது.

எங்களுடைய மாகாண மகாநாட்டில், இந்த மொழிப் பிரச்னை

யைப்பற்றி நீண்டதொரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அந்தத் தீர்மானத்தின் அடக்கம் முழுவதையும் நான் இப்பொழுது உங்களுக்கு விளக்கிச் சொல்லப்போவதில்லை. மொழிப் பிரச்னையில் பிரதேச மொழியின் இடம், அதாவது நமக்கு தமிழின் இடம் எது வென்ற முக்கியமான கருத்தை மட்டுமே நான் விளக்கிச் சொல்லப் போகிறேன்.

இந்தி எதிர்ப்பாளர்கள், இந்திக்கு எதிரிடையாக ஆங்கிலத்

தின் தேவையையும் பெருமையையுமே முதன்மைப்படுத்துகிறார் கள், எனது நண்பர் தி. மு. க. பொதுச் செயலாளர் நெடுஞ் செழியனைப் போன்றவர்கள் தமிழ் அரசு புரியவேண்டும்'