பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/9

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



8

என்று ஒப்புக் கொள்ளுகிறபொழுதே, 'ஆங்கிலத்துக்கு முத லிடம், ஆங்கிலமே எக்காளும்' என்கின்ற முழக்கொலிகளைக் கிளப்புகிறார்கள்.

இதைப் பற்றிக் கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்லுகிறது

என்பதை அறிய நீங்கள் விரும்புகிறீர்கள், தமிழுக்குத்தான் முதலிடம் என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி. எல்லாத் துறைகளிலும் பிரதேச மொழிகளின் தங்குதடையற்ற வளர்ச்சிதான் முதன் முதலில் கவனிக்கப்பட வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. அத்ததைய வளர்ச்சி ஏற்பட்டுள்ள சூழ் நிலையில் "இந்தியா? ஆங்கிலமா?" என்ற பிரச்னை சுமுகமாகச் சுலபமாக பைசலாகிவிடும் என்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து. இதைச் சிறிது விளக்கிக் கூறுகிறேன்.

தமிழுக்கே முதல் இடம்
இன்று நமக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டது, அந்தியர்

ஆதிக்கம் அகன்றுவிட்டது. தமிழ் ராஜ்யம் பெற்றுள்ள நாம் தமிழே எல்லாத் துறைகளிலும் அரசு வீற்றிருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பே. வேறு எந்தப் பிரச்னையில் நம் மிடையே கருத்து வேற்றுமை இருந்தாலும் இந்தப் பிரச்னையில் கருத்து வேற்றுமை இருக்க இடமில்லை. சட்ட சபையில் தமிழ் மொழி ஆட்சி செலுத்த வேண்டும். சர்க்கார் காரியாலயங்களில் அவை ராஜ்ய சர்க்கார் காரியாலயமாயினும் சரி, மாவட்ட, வட்ட ஸ்தல அரசாங்க அலுவலகங்களாயினும் சரி, எங்கும் தமிழே ஆட்சி செலுத்த வேண்டும். கல்லூரிகளில் தமிழ்! விஞ்ஞானத் தில் தமிழ்!தொழில் நுட்பத்தில் தமிழ்! உயர்நீதி மன்றம் முதல் சகல நீதிமன்றங்களிலும் தமிழ்!

இவ்வாறு தமிழகமெங்கும் தமிழ் மொழி தனியரசு ஓச்ச

வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி இத்தனை கோரிக்கைகளோடு மட்டும் நிற்கவில்லை

இந்திய பாராளு மன்றத்தில் தமிழகப் பிரதிநிதிகள் தமிழில்

பேசவும், சகல தஸ்தாவேஜுகளும் தமிழர்களுக்கு தமிழில் கிடைக்க ஆன உத்தரவாதம் வேண்டும்,

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளெல்லாம் தமிழனுக்கு தமிழில்

கிடைக்க உத்தரவாதம் வேண்டும்.

அதுமட்டுமல்ல, தமிழ் நாட்டிலிருக்கும் மத்திய அரசாங்கத்

தின் பல்வேறு துறை கிளைகள், தமிழ் மக்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ் மாதிரி ஒவ்வொரு பிரதேச மொழியின்

அந்தஸ்தும் உயர வேண்டும்.