பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ஜாதி ரோஜா

என்ற வார்த்தைகள் உதடுகளில் பிளவிலிருந்து நழுவி விழுந்தன. கைகளைப் பிசைந்தாள் ; தலைமயிரைப் பிய்த்தாள் ; பேயாகச் சிரித் தான் !

பூதலம் சுழன்றது. அதிலே அழகி ஒர் ஆடும் பம்பரம் !

இருபது இருபத்தைந்து நிமிஷங்களுக்கு முன்பு இருந்த அழ கியை எண்ணிப் பார்த்தாள். தன் கணவனுக்கு- அதாவது அழகே சனுக்கு ஆபத்து என்று டிரைவர் சொல்லக்கேட்டதும், அவள் அடைந்த பதட்டம் கொஞ்ச நஞ்சமல்ல ; அவளது நெஞ்சத்தில் தஞ்ச மடைந்த திகிலுணர்ச்சிக்கு அளவு சொல்வது சாத்திய மல்ல; அவள் கண்கள் துடித்த துடிப்பிற்கு ஒன்று, இரண்டு என்பதாக எண்ணிக் கைக் கூறமுடியாது ; எல்லாவற்றையும் விட, அவளுடைய மங்கல நாண் அழுத அழுகையை இட்டு நிரப்பப் பெரிய தோண்டிகூடப் பற்றது. அவளுக்கு நிழல் தந்து, கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு அவளுடைய நிழலைக்காத்து வந்த அன்பு மனிதர் -அவளது மாமனுரிடம் தான் கேள்விப்பட்ட தகவலைச் சொல்லி, அழகேசனுக்குக் கைக்கு மெய்யாக உதவி செய்யவேதான் அவள் அப்படி ‘மாமா...மாமா’ என்று இளைத்துக் களைத்து ஓடிவந்தாள்.

அந்த அழகி இப்போது எங்கே ? முதல் அழகி எங்கே ஒடி மறைந்தாள் ? எங்கே அந்த அழகி ? .

இரண்டாவது அழகிக்கு மூளை வலித்தது. மனச்சாட்சியின் நீதி நெஞ்சில் நெருப்பை வைத்தது. ஏவுகிறவனுக்கு வாய்ச் சொல் லோடு சரி; இயற்றுகிறவனுக்கல்லவா தலைச்சுமை...?

‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்ற எச்சரிக்கைப் பலகைகளுக்குப் பதிலாக பங்களாக்களிலே நாகரிகமான ஓர் உபாயம் கையாளப் படு. வது உண்டு. அதாவது, அங்கே ஆஜானுபாகுவான கூர்க்கா ஒரு வன்கின்று கொண்டிருப்பான். இங்கே அழகேசன் பவனமும் அதற்கு உடன் பட்டதுதான். அந்தக் காவலாளியையும் ஏமாற்றி விட்டு, கேள்வி முறையில்லாமல் உள்ளே நுழைந்துவிட்டாள் நில வுப் பெண். நுழைந்த சுட்டிப் பெண் வாய் பொத்திக் கண்பொத்தி இருந்திருக்கக்கூடாதா ? அதுதான் இல்லை. கன்னங்குழியச் சிரித் தான். விம்மிவெடித்துக்கொண்டிருந்த் அழகியிடம் கிச்சு கிச்சு தாம் பாலம். பாடினுள். அழகி சிரிக்கவில்லை ; சிந்தித்தாள். அவள் திருமதி அழகேச்கை மாறிய-அல்ல, மாற்றப்பட்டதற்குப் பின்னர் உருவாகியிருந்த சோகசரிதையின் பக்கங்கள் அவளுக்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கையில், அவள் எப்ப்டிச் சிரிப்பாள்? இல்லை,சிரிக்கத்தான் அவளால் முடியுமா?. அதனுல்தான் அவள் சிந்தித்தாள் ; அதுமட்டுமல்ல ; சீறிள்ை. அவள்தான் இந்தப் புது