பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. “ அழகி வெறும் ரோஜாவல்ல-ாதி.ரோஜா’

தாதி, இந்தாங்க அம்மா, உங்களுக்கு காகிதம்’ என்றாள். “பாசமுள்ள சிநேகிதி செந்தாமரைக்கு என்று ஆரம்பமான தடிதம் இப்படிக்கு உன் அன்புத்தோழி அழகி என்று முடிந் திருந்தது.

கடிதத்தின் இருதயப் பாகம் இது : “...நெஞ்சடியில் கொதித்துக்கொண்டிருக்கும் ரத்தக் கண்ணி ருடன் உனக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இது எனக்கு உயிர்ப் பிரச்சினை. ஆகவே, தயவுசெய்து கவனமாகப் படி,

உன்னிடம் நேரில் கேட்கவேண்டுமென்று சேமித்து வைத் திருந்த விவரங்கள் சிலவற்றை இப்போது சொல்லப்போகிறேன். என்னுடைய அத்தான்-ஆமாம், என்னுடைய சொந்த அத்தான் முரளியை நீ சர்வ நிச்சயமாக அறிந்திருப்பாய் என்றே நான் மனப் பூர்வமாக நம்புகிறேன். ஒரு நாள் நர்ஸ் விடுதியில் எனக்கு சாப்பாடு போட்டாயல்லவா ? அன்று உன் அறையிலிருந்த புத்தகத்தில் ஒரு புகைப்படத்தைக் கண்டேன். அது என் அத்தான்முரளியினுடையது. முன்னொரு நாளில், முரளி என்னை மறந்தார் ; நான் இந்த உலகத் தையே மறந்துவிட்டேன்!’ என்று நீ உன்னை மறந்து-ஏன், என்னை யும் மறந்து நீ பேசினுய். பின்னொரு நாள், நம் சுசீலா அக்கா வீட்டில் காம் சந்தித்தபொழுது, என்னை அழைத்தபடி எதிர்பாராத விதமாக அங்கே வந்து சேர்ந்த முரளியைப் பார்த்தவுடன், உன் கண்ணுேட் உத்தின் மூலம் உன் இதயத்தைப் படித்துக்கொண்டேன் நான்.

துர்ப்பாக்கியம் நிரம்பின என் வாழ்க்கையில் வசந்தம் நிலவ ே மேற்கொண்ட ரகசியமான முயற்சிகளுக்கெல்லாம் கிடைத்த பலன் ...உன்னை நான் தோற்கடித்து விட்டேன்...! என்னை மன்னித்துவிடு சகோதரி என்னுடைய நன்றி உனக்கு என்றும் உண்டு. -- ஆனால், இப்போது நான் உன்னிடம் ஒரு பிச்சை கேட்கப் போகிறேன். இது உயிர்ப்பிச்சை1 ஆம்; என் உயிர்ப் பிச்சை. அதிசயப் படுகிருயா, தாமரை ? -. புதிர் போடவில்லை நான். பதிலுக்கு நீயும் புதிர்போடாமல் இருக்க வேண்டும். நான் ஆண்டவனே ஏசிப்பேசினவள். நான் கண்ட களுக்களைப் பாழடித்து விட்டானே அவன்?...விதியை நையாண்டி செய்தவள் நான். மறுக்கவில்லை. அது என்னே கை வாண்டியும் கயித்தியமும் பண்ணிவிட்டதே ? படைத்தவனும் -

அமைத்துக் கொண்டிருக்கும் புதி வளையத்திலிருந்து விடுட்த்