பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. அந்திச்செவ்வானம் அப்போதே மழை !

“ ஆமாம், அழகியேதான் ! எங்கள் அழகி 1...என் மருமகள் அழகியேதான் !” -

பெரியவர் சோமநாதன் தன்னை மறக்காமல் விம்மினர் ; தன்னை மறந்து பேசினர் ; அந்தரத்தில் பறந்தது அவர் உள்ளம் ; அது ‘சிரி சிரியென்று சிரித்தது. நடுங்கும் கைகளால் மருமகளின் தோள் களேத் தொட்டுத் துக்கினர் அவர். ஊன் உருகியது ; உள்ளம் உருகியது. ஏன், அவரே உருகி வழிந்து கொண்டிருந்தார் !

அழகி கண்களைத் திறந்தாள். பார்வைக்குக் கண்ணிர் வெள் ளம் அணை கட்டியது. சித்தம் பறிபோனவளைப் போல அங்கும் இங்கும், அப்படியும் இப்படியும் பார்த்தாள். அவளுக்கு ஒன்றும் பேசத்தோன்றவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டமாதிரி இருந்தது அவளுக்கு. உணர்ச்சி வெறியில் அள்ளாடித் தள்ளாடி’ ஓடிக்கொண்டிருந்த மனக் குதிரையின் லகானப் பிடித்து இழுத் த்ாள், சுய நினைவு சிறுகச் சிறுக அவளோடு ஒட்டி உறவாடிப்து.

கொஞ்சப் பொழுதிற்கு முன்னதாக ‘மாமா.மாமா !’ என்று. கதறிய சொற்களை எதிரொலித்துக் காட்டியது சுற்றுப்புறம். விழி களை ஒரு நிலைக்குக் கொண்டு வந்து பார்த்தாள் அழகி. வாய் ஒய்ா மல் இன்னமும் அழுது கொண்டுதான் இருந்தார் அழகேசனின் அப்பா,

மாமா, என்னை மன்னிச்சிடுங்க...! என்னே மன்னிச்சிடுங்க, மாமா !” என்று செருமினுள் அவள். -

அம்மா அழகி, கான உன்னை மன்னிக்க வேணும்?...இல்லே. அம்மா ...நீ தான் என்னை மன்னிக்கணும் .குற்றம் செய்தவங்க தானே மன்னிப்பை யாசிக்க வேனும் ?’ என்று சொல்லி மறுபடி பும் விம்மினர் அவர். .

. நீங்க பெரியவங்க ;_என் மாமனர், அப்படியெல்லாம் சொல் லாதீங்க...’ என்று அழகி கூறிக்கொண்டிருக்கும்போது, சுசீலா, அவள் கணவர் ராமலிங்கம், அவள் தம்பி கரிகாலன் மூவரும் அங்கே வந்து சேர்ந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து செந்தாமரை வந்து கின்றாள் ; இரண்டு விணுடி கழித்து முரளி வந்தான். -