பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தெய்வத் திருவிளக்கு ஏற்றி வைத்தாள் !

“ஏன் பெண்ணுய்ப் பிறந்தேன்... ?” இந்த ஒரு கேள்வி-ஒரே ஒரு கேள்வி அழகியின் இதயத். தளத்திலிருந்து ஒன்பது கேள்விகளாக, தொண்ணுாறு கேள்விகளாக, தொள்ளாயிரம் கேள்விகளாக மாறி எதிரொலி பரப்பிக் கொண்டிருந் தது. கைகொட்டித் தவழ்ந்த கடல் அலைகள் மெய் விதிர்த்து நின் றன. குரலெடுத்துப் பாட பண் சேர்த்து இசையமைத்துக் கொண் டிருந்த மாருதம் செயலற்றுப்போனது. - -

அழகி திக்கெட்டிலும் விழிகளைத் திசை திருப்பினுள். சூன்யம் அட்டகாசமாகச் சிரித்தது. விதியின் குரலா அது ? அல்லது, நியதி யின் அழைப்பா அது? அல்லது, ஆண்டவனது தீர்ப்பின் ஒசையா? அல்லது, அவர்-அழகேசன்தான் கூப்பிடுகின்றாரா ...? -

தான் அழகி என்பதை உணர்ந்தாள். அப்போது வாலைக் குமரியான அழகி தோற்றம் தந்தாள். ஆசை நினைவுகளைக் கண்க ளிலே தேக்க விட்டு ஒயிலாக நின்றாள் அந்த அழகி. அப்பொழுது எதிர்காலம் அவள் முன் பசுஞ்சோலேயாக--காதற் பூங்காவாககனவுகள் சிரித்து வரவேற்கும் பூலோக சொர்க்கமாகத் திகழ்ந் திருக்க வேண்டும். ஆனால் இப்போது அவள் மனக்கண்முன் வேருேரு அழகியின் உருவம் தோன்றியது; ரசமிழந்த கண்ணுடி யில் தெரியும் முகம்போல பொலிவு மறைந்து காணப்பட்டாள். கண்ட கனவுகள் களவு போய்விட்டனவென்று மொழிந்தன. அவை;. வருங்காலம் பேய்க்காடாகி விட்டதே என்று அன்வை புலம்பின. அந்த அழகி வெறும் அழகியல்ல ; திருமதி அழகேசன்!-ஆமாம், ஆகி அழகேசன்...!” -

சிவனே யென்று நிச்சிந்தையுடன் ஜலதரங்கம் வாசித்துக் கொண்டிருந்தது விரிகடல். அதற்குப் பேசத் தெரியவில்லை. தெரிந் திருந்தால், அழகியின் கண்ணிரைத் துடைத்திருக்காதா?...ஆன. லும் சுழல் கடலின் நோக்கு முழுவதும் அழகியைச் சுற்றியேதான் கட்டுண்டிருந்தது. அருகிருந்த தோழி தாமரையைப் பிரிந்து அவள் மெல்ல மெல்ல ஏன் தள்ளி உட்கார வேண்டும்? என்பதாக அதற்கு ஒரு குருட்டுச் சந்தேகம். -

‘ஊஹாம், மூடியது. அழகேசனுடன் நான் வாழவே முடி

யாது!ளன்.ஜாதிரோஜா. தேவலோகத்து ராஜாத்தி நான். அற்பி,