பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஜாதி ரோஜா

றெடுத்து, பாரத மண்ணின் ஜனத்தொகையில் ஒரு உயிரை அதிகப் படுத்திவிட்ட சந்தோஷத்திலே என் தாயார் இறந்து விட்டாள். அந்த அன்னை விட்டுச்சென்ற இடை வெளியை இட்டு நிரப்ப எனக்கு, ஒர் அம்மா கிடைத்து விட்டிருத்சிருள். தாய்க்குப் பிறகு, தந்தை! ரத்ததானத்துக்கு விஞ்ஞானம் கற்றுத் தந்திருக்கிற வழிகளைப்போல இந்த உயிர்த்தானத்துக்கும் வழி ஏற்படாமலேயே, என் அப்பா என்னுள் தன் உயிரை அர்ப்பணித்து விட்டு என்னைப் பேணிக். காப்பாற்றினர். ஆனுல் அவரது உயிரைக் காப்பாற்ற எனக்குத் தெம்பில்லே. மாங்கல்யமும் கழுத்துமாக எனனேக் கண்துளிரப் பார்த்துப் பரவசமடைய வேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்த என் அப்பாவை இந்தப் பாழாய்ப் போன திருமண ஒப்பந்தம் சாக டித்து விட்டது. தந்தையின் ஸ்தானத்திற்கு எனக்கு ஒர் அப்பாவும் கிடைத்து விட்டிருக்கிறார். அதற்கு நான் முன் பிறவியில் எவ்வளவோ பூஜா பலன் செய்திருக்கத்தான்.வேண்டும். என்ன அப்படிப் பார்க் கிறாய், தாமரை?...நான் இழந்து விட்டிருக்கும் வெவ்வேறு வகைப் பட்ட மூன்று உருவங்களும் ஒன்று சேர்ந்த அந்த அதிசயப் பிறவி, யாரென்று யோசிக்கிருப்ா? உன் மூளைக்கு இப்போது வேலை கொடுக்கவேண்டாம். அந்த உருவம் வேறு யாருமல்ல ; சாட்சாத் என் செந்தாமரையேதான்! ஆமாம்; நியேதான்...!” -

ஆமாம், நீயே தான்!” என்ற சொற்கள் அவளது உதட்டிலி ருந்து வெளி வந்தபோது அழுகையும் சேர்ந்து பிரிட்டு வந்தது. சரிந்து விழவிருந்த மேலாடையைச் சரி செய்து கொண்டாள் அழகி. செந்தாமரை அவளை நெருங்கி அவளது கண்ணிரைத் துடைத்து விட்டாள். நெற்றி மேட்டில் வம்பு செய்து கொண்டிருந்த மயிரிழை. களே ஒதுக்கி விட்டாள். .

செந்தாமரை, நீ எனக்கு ஒரு வரம் தா!...” என்று தேம்பிய வாறு கேட்டுக்கொண்டே, கட்டிலே விட்டு எழுந்தாள் அழகி. எழுந்த வள், அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டாள். பிறகு, அவ. ளுடைய வலது கன்னத்தில் தன் வலது கையை வைத்துக் கெஞ் சியவாறு, செந்தாமர்ை, செந்தாமரை...’ என்றாள். மறுபடியும் விக்கி விக்கி அழத் தொடங்கிவிட்டாள் அழகி. . . . . . . . .

‘அழாதே, அழகி என்னிடம் நீ வரம் கேட்கும் அளவுக்கு, கான் இன்னும் தெய்வமாகவில்லையே...? நான் வெறும் மனிதப் TTTllllllS S

நான் தெய்வமாக நினைத்தவர்கள் மனிதர்களாகிவிட்டார்கள். ஆனல் நீ என்வரை தெய்வமேதான் வெறுங் கல்லாய் சமைந்து நிற்கும் சிலைகளையே தெய்வமென நம்பி வாழ்க்கை நடத்தும் இந்த உலகத்திலே, என்க்கெனச் செய்த நன்மைகளைக் கொண்டு பார்த்.