பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்காத ரோஜா சிரித்தது ! 77

விட்டுக் கூடு பாய்ந்து விட்டாரே ? ஆளுல், இன்று என்னுடைய எழுத்துலக வாழ்க்கையின் புனித நாள். மாலையில் எனக்குப் பரிசு கொடுக்கப் போகிருராம் கல்வி மந்திரி ... என் பேணுவை நான் மறக்க முடியுமா ?. கீழ்ப்பாக்கத்திலே பைத்தியக்கார ஆஸ் பத்திரியிலே இருக்கவேண்டிய் நான், இவ்வாறு செம்புதாஸ் தெரு வில் நல்லபடியாக வசித்து வருவதற்கு வழி வகுத்துக் கொடுத்தது என் பேணுவே யல்லவா ? அன்பில்தான் ஆண்டவனேக் காண முடியும் சிலருக்கு ; எனக்குத் துன்பத்தில்தான் ஆண்டவனைக் காணத் தெரியும். என் போக்கு இப்படி. நான் இங்கே இருக் கிறேன் ; என் உயிர் மைலாப்பூருக்கு அடிக்கடி பறந்து சென்று விடுகிறதே ? நான் அவருடைய மறுபாதி என்பதனுலா ? ஒரு மண்ணுங்கட்டியும் இல்லை ! நான் பாழ் ; என் கனவு பாழ் ; எல் லாமே பாழ் ... சே, சே... ! ?

பிறை வடிவில் துண்டு போடப்பட்டிருந்த தங்கப்பாளம் போன் றிருந்த நெற்றியின் எல்லையில் தொல்லை தந்து கொண்டிருந்த கேசச் சுருள்களை தாஜா பண்ண வேண்டித் தூதுவந்த சீப்பைத் துக்கி வீசி எறிந்தாள் அழகி. உச்சி வெய்யில் அதை இரண்டாக்கி வி யாடிக் கொண்டிருந்தது. .

மெல்லிய பாதம் வைத்த வெள்ளே பூட்ஸ் சத்தம் யானை அடிக் கல்லில் பதிந்து பிரியும்போது ஏற்படுமல்லவா ஒருவகை மெல்லிய நாதம், அது இப்போது கேட்டது. கண்களுக்கு இதயம் உண்டு : இதயத்திற்கும் கண்கள் உண்டு. . . “

நர்ஸ் செந்தாமரை நின்றுகொண்டிருந்தாள். உதட்டோரத்துப் பணிச் சிரிப்பு முகமன் மொழிந்தது. - அழகி, சாயந்திரம் விழா. அதற்கு இப்பொழுதிருந்தே டிரஸ்

செய்து கொள்ளத் தொடங்கி விட்டாயா ? பேஷ் ...” என்று கேலி பண்ணியவாறு, அவளை ஒரு முறை பார்த்தாள் தாமரை. தாலி தெரிந்தது. அன்றாெரு நாள்-போலீஸ்காரர்கள் துரத்தி வந்த முரளியைக் காப்பாற்றிக் கொடுத்த பிறகு, அவன் கையில் வைத் திருந்த அந்த விளம்பரம் திரும்பவும் ஒரு முறை தெரிந்தது-கண் னிலே, கருத்திலே, கனவிலே .

தமிழ்த் தொண்டு நாவல் போட்டியில் பரிசு பெற்ற அழ கிக்கு அழகேசன் தலைமையில் பரிசு வழங்கப் போவதாக விளம் பரம் போடப்பட்டிருந்ததே ? என்ன அதிசயம் இது ? என்று எண்ணங்களைத் தன்னுள் தொடர் சேர்த்துப் பார்த்துச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், அழகி அவளைக் கூப்பிட்டாள். தன்கையி லிருந்த விளம்பரத்தாளே மருத்துவப் பணிப் பெண் செந்தாமரை