பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்காத ரோஜா சிரித்தது ! 79

செந்தாமரை சில அடி துரம் தள்ளி நின்று கொண்டிருந் தாள். அவளுடைய கையிலிருந்த புத்தகம் அவளுடைய கண வழியே பலன் பெற்றிருக்க முடியாது.

ஒரு சமயம், அழகி கர்ஸ் விடுதியில் தங்கி யிருந்தபோது, செந். தாமரையின் புத்தகமொன்றில் தன் அத்தான் முரளியின் புகைப் படத்தைப் பார்த்த காட்சியை அவள் எண்ணத் தவறுவாளா ? அல்லது, முரளி என்னை மறந்தார் ; நான் இந்த உலகத்தையே மறந்துவிட்டேன் என்று தர்மரை தன் நெஞ்சம் திறந்து ஒருநாள் கூறின சொற்களைத்தான் மறப்பாளா ?

செந்தாமரை பார்வையைத் திருப்பிளுள் ; முரளியின் பார்வை யும் திரும்பியது. - •. -

மைலாப்பூரில் அழகேசன் விலாசம் பங்களாவில் முரளி யைத் துரத்திக்கொண்டு போலீஸ் ஜவான்கள் வரக் காரணம் என்ன ? என்ற கேள்வியை தாமரையின் மனச்சாட்சி கேட்டது : அதைத் திருப்பி அவள் அவனிடம் கேட்க முடியவில்லை. அன்று, பைத்தியக்காரன் மாதிரி விரக்தியுடன் சிரித்தபடியே திடீரென்று மறைந்துவிட்ட முரளியின் போக்கைப் பற்றியும் தாமரை அனுமா னம் ஏதும் செய்ய முடியவில்லை.

கையிலிருந்த பத்திரிகையைப் படித்துக்கொண்டே முரளியை நெருங்கினுள் அழகி ; அவன் சட்டைக் காலரை நெருடி விட்டுக் கொண்டு புதிர்ச் சிரிப்புடன் அழகியிடமிருந்து விலகினுன்.

அழகி தி என்பதைப் புரிந்துகொண்டு விட்டான ?

தி சிரித்தது; தாமரை, இவர்தான் என் அத்தான். பெயர் முரளி. அன்று என் கனவுக்கெல்லாம் வடிவம் தந்தவர் ; இன்று இவரே கனவின் வடிவாக ஊசலாடுகிறார். விதி பிழை செய்து விட்டது, தாமரை ; விதி பிழை செய்து விட்டது ‘

தீயின் இரண்டாவது சிரிப்பொலி இதோ : அத்தான், என் னுடைய உயிர்த் தோழி இவள். செந்தாமரை என்று பெயர் ; நான் மறந்துவிட்ட ஒரு முடிவை இவள் ஆரம்பமாக்கி விளையாட ஆசைப்படுகிருள். என்னுடைய வாழ்க்கைச் சீட்டாட்டத்தில் துருப்புச் சீட்டு இடம் மாறி, கைமாறிப் போய் விட்டதே தெய்வம் வஞ்சித்து விட்டது, அத்தான் ; தெய்வம் வஞ்சித்து விட்டது : ‘

மறுபடியும் உணவு வேளைக்கு கினேவுக் குறிப்பு வந்தது.

தன் அத்தான உணவுக்கு அழைக்க விரும்பித் திரும்பினுள். அங்கே முரளி இருந்தால்தானே ? அடுத்த விளுடி, வீட்டு வாசலை