6 ஜியார்டனோ புருனோ தரிப்பதா? வெள்ளுடை அணிவதா ?-போர்க்களம் புகுவதா? மாதாகோயில் நுழைவதா ?- போர்வீரனாய் மாறுவதா? பாதிரியாய்ப் போவதா? இரண்டு நிலைமை களுக்குமுள்ள ஏற்றத்தாழ்வு. நன்மை தீமை,நிறை குறை ஆகியவைபற்றி நீடு சிந்திக்கிறான், நாடும் அரசும் குழப்பம் நிறைந்தனவாகவும், மா தாகோயில் மடம் அமைதி நிறைந்தததாகவும் அவனுக்குத் தோன்றுகின் றன. கோயில் விடுதியில் நுழைந்தால் அங்கு நூல்கள் இருக்கும்; படிக்க வசதியிருக்கும்; அறிவைப் பெருக் கவும், உண்மை கண்டறியவும் வாய்ப்பு ஏற்படும் என் றெல்லாம் எண்ணமிடுகிறான். மேலும் ஆன்செல்ம் என்ற பாதிரியார் அந்த இளைஞனைக் காணும் போதெல் லாம், அவன் மாதாகோயில் சீடனாக மாறிவிட்டால். வாழ்க்கையின் குறிக்கோளை அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று கூறியிருக்கிறார். இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்து இறுதியில் கோயில் விடுதியில் புகு வது என்ற உறுதியான முடிவுக்கு வந்து, முகமலர்ச்சி யோடு எழுகிறான். அவன் கண்கள் ஒளி வீசுகின்றன ; அவனது கன்னங்களில் மகிழ்ச்சி விளையாடுகிறது. தான் நுழையப்போகும் புது இடத்தில் கல்வி தனக்குத் தோழ மையாக இருக்கும்; உண்மை தனக்கு வழிகாட்டியாக இருக்கும் என்றெல்லாம் எண்ணிப் பெருமிதங் கொண் டவாறே நடக்கிறான். யார் அவன்? அவன் தான் ஜியார்டனோ புருனோ ! 46 புரூனோநோலா என்ற சிறுநகரிலிருந்த தன் வீடு போய்ச்சேர அன்று சற்று நேரமாகி விட்டது. புரூனோ வின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவனு டைய தாய் ஜியார்டனோ! ஏன் கண்ணே இன்று இவ்வளவு நேரமாகிவிட்டது ? நீ நீண்ட நாழிகையாய் வர வில்லையே ! உன்னுடைய சிற்றப்பா இதுவரையில் உனக்காகக் காத்திருந்துவிட்டு, இப்பொழுதுதான் மிகச் சோர்வோடு சென்றார். நீ இப்பொழுது வளர்ந்தவனாக
பக்கம்:ஜியார்டனோ புரூனோ.pdf/7
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை