பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூர்வ பீடிகை (அமைப்பு முதலிய விவரங்கள்)

9

ஏராளமான மரங்கள் வெட்டி விடப்பட்டதால் அக்காடுகளெல்லாம் முற்றிலும் அழிந்து போயின, இப்பொழுது உள்ள மரங்கள் மிக்க ஜாக்கிரதையுடன் காப்பாற்றி வரப்பட்டு வருகின்றன.

தென் கிழக்குத் தாலூகாக்களின் சம வெளியான அமைப்பு பாலாற்றிற்கு வடக்கில் கொஞ்சதூரம் வரை சென்றிருக்கக் காணலாம். கிழக்குத் தொடர்ச்சிமலையின் பக்கத்துச் சிறுமலைத் தொடர்கள் சித்தூர் ஜில்லாவின் வழியாக வாலாஜாவுக்கு வடக்கிலும் கார்வேட்நகர ஜமீன்தாருக்கு மேற்கிலும் சென்றிருக்கின்றன. இந்தக் கார்வேட்நகர ஜமீன்தாரியின் வழியாக ஒரு விசாலமான செழுமை பொருந்திய பள்ளத்தாக்கு சென்றிருக்கிறது. இது கிழக்குப் பக்கத்தில் காளஹஸ்தி ஜமீன்தாரிக்குள் வடக்கு நோக்கி சுமார் நாற்பது மைல்கள் சென்றிருக்கும் நகரிக் குன்றுகளால் அடைக்கப்பட் டிருக்கிகிறது. மூங்கில் காடுகள் முதலானவைகளுடன் பசுமையாகக் காணப்படும் சரிவுகளுடன் கூடிய இத்தொடர்ச்சியே இந்த ஜில்லாவிலேயே அழகிய தோற்றம் வாய்ந்துள்ளது. மேலும், மற்றைய குன்றுகளுக்குள் முக்கியமானது 2,000 அடி- உயரமுள்ள திருவண்ணாமலைக் குன்றே. இது இந்த ஜில்லாவின் தெற்கு பாகத்திலுள்ளது.

இந்த வட ஆற்காடு ஜில்லாவின் நதிகள் உற்பத்தியாகி ஓடும் மாதிரி ஒழுங்கற் றிருத்தலுக்குக் காரணம் இது குன்றடர்ந்திருப்பதே.வட பாகம் மேற்கிலும் வடக்கிலும் கிழக்குத்தொடர்ச்சி மலையாலும் கிழக்கில் கார்வேட்நகரக் குன்றுகளாலும் தடைகள் ஏற்பட்டிருக்கும் காரணம்பற்றி