பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்தியாயம் 1
தேச சரித்திரம்

வட ஆற்காடு ஜில்லா திராவிட தேசமென்று வழ்ங்கிய தேசத்தின் ஒரு பாகம். முதல் முதல் எப்பொழுது எந்த ஜனங்கள் இதில் வந்து குடியேறினார்கள் என்ற விஷயம் தெரிய வில்லை. இதன் புராதனக்குடிகள் அடர்ந்த காடுகளில் நாகரீகமின்றி வாழ்ந்து வந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. அவர்களுக்கு மலைசார்க ளென்றும், இன்னும் பலவிதமான பெயர்களும் ஏற்பட்டிருந்ததாகத் தெரிகிறது. அவர்கள் சிலவேளைகளில் நிர்வாணமாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் யாதொரு மதத்திற்கும் சேராமலும், யாதொரு அரசனது ஆக்ஷியின்கீழ் ஏற்படாமலும், கலியாண சம்பிரதாயம் யாதுமே இல்லாமலும் வேடர்களா யிருந்திருக்கிறார்கள். இந்த ஜில்லாவின் புராதனக் குடிகளைச் சேர்ந்தவர்கள் தான் இப்பொழுதும் காட்டில் வசித்துக் கொண்டு காட்டு விளைபொருள்களைக் கொடுத்து நாட்டுப் பொருள்களை அவைகளுக்காக மாற்றிக் கொண்டு போக வழக்கப்பட்டுள்ள ஏனாதிகள், இருளர்கள் என்ற ஜாதியார்கள் எனக் கூறுகிறார்கள்.

இந்தத் திராவிடம் என்ற பெயருடன் கூடிய பிராந்தியம் மிகச் செழுமையான பூமி என்ற காரணம் பற்றிச் சீக்கிரத்தில் அனேகர் வந்து குடியேறத் தலைப்பட்டார்கள். அவர்கள் முதலில் சமுத்திரக்கரை ஓரங்களிலும், பெரிய நதிகளுக்கருகிலும் தங்கினார்கள். அப்படித் தங்கினவர்களுள் முதல் முக்கியமானவர்கள் குரும்பர்கள். இவர்கள்